பெருநிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சகம்
கொவிட் 19 பரவலைத் தொடர்ந்து, சட்டத்தை மதிக்கும் நிறுவனங்களுக்கும், வரையறுக்கப்பட்ட பொறுப்பு கூட்டுத் தொழில்களுக்கும் நிவாரணம் அளிக்க 'நிறுவனங்கள் புதிய தொடக்கம் திட்டம், 2020'ஐ அறிமுகப்படுத்தி, 'வரையறுக்கப்பட்ட பொறுப்பு கூட்டுத் தொழில் தீர்வு திட்டம், 2020'ஐ திருத்தியுள்ளது பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகம்
Posted On:
30 MAR 2020 9:11PM by PIB Chennai
கொவிட் 19 பரவலைத் தொடர்ந்து, சட்டத்தை மதிக்கும் நிறுவனங்களுக்கும், வரையறுக்கப்பட்ட பொறுப்பு கூட்டுத் தொழில்களுக்கும் நிவாரணம் அளிக்க இந்திய அரசு எடுத்து வரும் முயற்சிகளின் தொடர்ச்சியாக, 'நிறுவனங்கள் புதிய தொடக்கம் திட்டம், 2020'ஐ அறிமுகப்படுத்தி ஏற்கனவே உள்ள 'வரையறுக்கப்பட்ட பொறுப்பு கூட்டுத் தொழில் தீர்வு திட்டம், 2020'ஐ திருத்தி, நிறுவனங்கள் மற்றும் வரையறுக்கப்பட்ட பொறுப்பு கூட்டுத் தொழில்களுக்கு முன்னெப்போதும் இல்லாத வகையிலான ஒரு வாய்ப்பை பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகம் அளித்துள்ளது. இதன் மூலம், தாக்கல் தொடர்பாக ஏதாவது வழுவுதல்க்ள் இருப்பின், வழுவிய காலம் எவ்வளவு இருப்பினும், நிறுவனங்களும், வரையறுக்கப்பட்ட பொறுப்பு கூட்டுத் தொழில்கள்களும் முழுவதும் இணக்கமான ஒரு நிறுவனமாக புதிய தொடக்கத்தை மேற்கொள்ளலாம்.
கொவிட் 19ஆல் ஏற்பட்டுள்ள முன்னெப்போதும் இல்லாத பொது சுகாதார நிலைமையினால், நிறுவனங்களின் கணக்குத் தாக்கல் சுமையினைக் குறைக்கவும், தாக்கல்களை எளிதாக்கவும் ‘நிறுவனங்கள் புதிய தொடக்கம்’ திட்டமும், வரையறுக்கப்பட்ட பொறுப்பு கூட்டுத் தொழில் தீர்வு திட்டமும் உதவும். இந்த திட்டங்களின் காலவரையான ஏப்ரல் 1, 2020 தொடங்கி 30 செப்டம்பர் 2020 வரை, நிறுவனங்கள் அல்லது வரையறுக்கப்பட்ட பொறுப்பு கூட்டுத் தொழில்கள், நிறுவனங்களின் பதிவாளரிடம் செய்யும் தாமதமான தாக்கல்களுக்கான கூடுதல் தாக்கல் தொகை ஒரு முறை தள்ளுபடி செய்யப்படுவதே இந்த இரு திட்டங்களில் சிறப்பம்சமாகும்.
****
(Release ID: 1609476)
Visitor Counter : 156