அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகரின் பத்திரிகை விளக்க அலுவலகம்

கொவிட்-19க்கு அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு எதிர்வினை குறித்த தகவல்

Posted On: 30 MAR 2020 7:22PM by PIB Chennai

கொவிட்-19க்கு எதிர்வினை ஆற்ற அதிகாரம் மிக்க அறிவியல் மற்றும் தொழில்நுட்ப குழு ஒன்று 19 மார்ச் 2020 அன்று அமைக்கப்பட்டது. நிதி ஆயோக் உறுப்பினர், பேராசிரியர் வினோத் பால் மற்றும் இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர், பேராசிரியர் கே.விஜயராகவன் தலைமையிலான இக்குழு, சார்ஸ்-கொவ்-2 வைரஸ் மற்றும் கொவிட்-19 நோய் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிலிருந்து அமல்படுத்துதல் வரையிலும் அறிவியல் நிறுவனங்கள், விஞ்ஞானிகள், தொழில் துறையினர் மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகளை ஒருங்கிணைத்து துரித முடிவுகள் எடுப்பதற்கு பொறுப்பானதாகும்.

அறிவியல், தொழில்நுட்பத்துறையின் செயலாளர், உயிரித் தொழில்நுட்பத் துறையின் செயலாளர், அறிவியல், தொழில் துறை ஆராய்ச்சி அமைப்பின் செயலாளர், மின்னணு மற்றும் தகவல் தொழிநுட்ப அமைச்சகத்தின் செயலாளர், தொலைத் தொடர்புத் துறையின் செயலாளர், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் செயலாளர், இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் செயலாளர், அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் செயலாளர், சுகாதார சேவைகளின் பொது இயக்குநரகம் மற்றும் இந்திய மருந்துக் கட்டுப்பாட்டுத் துறையின் தலைவர் ஆகியோர் இந்தக் குழுவின் இதர உறுப்பினர்கள் ஆவார்கள்.

அறிவியல் தீர்வுகளை நடைமுறைப்படுத்த இந்தக் குழு துரிதமாக செயல்படுகிறது. கொவிட-19 பரிசோதனை வசதிகளை அதிகப்படுத்தும் அவசியத் தேவையைக் கருத்தில் கொண்டு கீழ்க்கண்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன:

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, உயிரித் தொழில்நுட்பத் துறை, அறிவியல் மற்றும் தொழில் துறை ஆராய்ச்சி அமைப்பு, அணுசக்தித் துறை, ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், மற்றும் இந்திய அறிவியல் நிறுவனம் ஆகியவற்றுக்கு, அவற்றின் பரிசோதனைக் கூடங்களை நிலையான மற்றும் கடுமையான நெறிமுறைகளுக்கு ஏற்ற வகையில் சுயமதிப்பீடு செய்து, ஆராய்ச்சி மற்றும் பரிசோதனைக்கு தயார் படுத்துவதற்கு அனுமதி அளித்து ஒரு அலுவல் அறிக்கை வெலியிடப்பட்டுள்ளது . சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் நிர்ணயித்துள்ள முன்னுரிமைகளின் படி பரிசோதனைகள் வரிசைப்படுத்தப்படும். குறுகிய மற்றும் இடைக்கால முடிவுகளாக ஆராய்ச்சி வகைப்படுத்தப்படும்.

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் பரிசோதனைக் கூடமான ஸ்ரீ சித்ரா மருத்துவ அறிவியல் நிறுவனம், திருவனந்தபுரம், உயிரி தொழில்நுட்பத் துறையின் ராஜிவ் காந்தி உயிரி தொழில்நுட்ப மையம், திருவனந்தபுரம், அறிவியல் மற்றும் தொழில் துறை ஆராய்ச்சி அமைப்பின் உயிரணு மற்ற்ம் மூலக்கூறு மையம், ஹைதராபாத், அணுசக்தித் துறையின் டாடா நினைவு மருத்துவமனை, மும்பை ஆகியவை இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தால் பரிசோதனைக் கூடங்களாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டன. உள்கட்டமைப்பு மற்றும் திறன் உள்ள இதர பரிசோதனைக் கூடங்களும் பரிசோதனைகளுக்காக தயார்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. தனிப்பட்ட நபர்கள் மற்றும் பகுதிகளை தனிமைப்படுத்துவதற்கான தகவல் சார்ந்த முடிவை எடுப்பதற்கு பரிசோதனைகள் வழிவகுக்கும்.

பெரிய அளவிலான கொவிட்-19 பரிசோதனைக்கும், ஊண் நீரியல் மதிப்பீட்டுக்கும்  தனியார் துறையுடன் இணைந்து அரசு சுறுசுறுப்பாக இயங்கி வருகிறது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தித் தடுப்பதற்கான கண்காணிப்பு மற்றும் மருத்துவ ஆராய்ச்சிக்கு இது உதவும்.

பல்வேறு அமைச்சகங்கள்/துறைகள் ஆதரிக்கும் அறிவியல் நிறுவனங்கள் ஒருங்கிணைந்து கீழ்கண்ட பலதரப்பட்ட திட்டங்களைத் தொடங்கியுள்ளன:

1. மருந்துகளை மறுநோக்கப்படுத்துதல் மற்றும் மருந்துகளை மறுநோக்கப்படுத்துதலுக்கான பணிக்குழு பல்வேறு மருந்துகளின் மூலக்கூறுகள் குறித்த ஆழ்ந்த தகவல்களை சேகரிக்கத் தொடங்கி விட்டன. ஒழுங்குமுறை/சட்ட நடைமுறைகளும் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

2. நோய்ப் பரவலைக் கண்காணிக்க கணித முறைகள் மற்றும் கொவிட்-19க்கான மருத்துவ உபகரணம் மற்றும் துணைத் தேவைகளை முன்கூட்டியே கணிப்பதற்கான முறைகள்.

3. இந்தியாவில் பரிசோதனைப் பெட்டி (கிட்) மற்றும் வென்டிலேட்டர்கள் தயாரித்தல்.

'சார்ஸ்-கொவ்-2 கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க முகக்கவசங்கள் குறித்த சுகாதார மற்றும் குடும்ப நலத் துறையின் விளக்கப்படம்: வீட்டில் தயாரிக்கப்படும் முகக்கவசங்கள் குறித்த கையேடு' இணைக்கப்பட்டுள்ளதை  இணையத்தில் தயவு செய்து காணவும்.



(Release ID: 1609466) Visitor Counter : 156