சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்

கோவிட்-19 நோய்த் தொற்று சூழ்நிலையில் வருமான வரி மேல்முறையீட்டு டிரிபியூனலின் அனைத்து அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் தங்களுடைய ஒரு நாள் ஊதியத்தை கோவிட் 19க்கு எதிரான நடவடிக்கைகளுக்கான பிரதமர் நிவாரண நிதிக்கு அளிக்க முடிவு

Posted On: 30 MAR 2020 5:20PM by PIB Chennai

கோவிட்-19 நோய்த் தொற்று பாதிப்பு சூழலில், வருமான வரி மேல்முறையீட்டு டிரிபியூனல்களின் துணைத் தலைவர்கள் அனைவருடனும் ஆலோசித்த பிறகு, இந்த நோய்த் தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில், அனைத்து அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள், அதாவது தலைவர், துணைத் தலைவர்கள், உறுப்பினர்கள், ரெஜிஸ்ட்ரி அதிகாரிகள், மற்றும் அலுவலர்கள் தங்களுடைய ஒரு நாள் ஊதியத்தை PM CARES நிதிக்கு, வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

சமூக மற்றும் தேசிய பொறுப்புகளை உணர்ந்து செயல்படும் ஒரு நிறுவனமாக, வருமான வரி மேல்முறையீட்டு டிரிபியூனல் சார்பில் அதன் தலைவர் நீதிபதி பி.பி. பட் இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டார். பிரதமரின் இந்த நிவாரண நிதிக்கு, தொடர்புடைய துறையினர் அனைவரும் தாராளமாக நன்கொடைகள் அளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த நிதிக்கான நன்கொடைகளுக்கு வருமான வரிச் சட்டம் 1961ன் பிரிவு 80 (ஜி)-ன் கீழ் வரிவிலக்குச் சலுகை  உண்டு. பின்வரும் இணையதள தொடர்பு சுட்டி வழியாகச் சென்று இதற்கான நன்கொடைகளை அளிக்கலாம்: wvvw.prnindiagov.in/en/pm-cares/

 



(Release ID: 1609321) Visitor Counter : 109