பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறையின் நினைவூட்டல்

Posted On: 28 MAR 2020 8:21PM by PIB Chennai

மத்திய பணியாளர் நல அமைச்சகம் புதிதாக விடுத்துள்ள அலுவலக நினைவூட்டல் அறிக்கையில், அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகள் ,தங்கள் அலுவலகங்களுக்குள் அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்வதற்குத் தேவைப்படும் பணியாளர்கள் பட்டியலில் இருந்து, மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளது. 

21 நாள் பொது முடக்க அறிவிப்பு வெளியான உடன் பணியாளர் நலத்துறை வெளியிட்ட முந்தைய அலுவலக அறிக்கையில், துறைகளுக்குள் அத்தியாவசியப்பணிகளை மேற்கொள்வதற்கு தேவைப்படும் பணியாளர் பட்டியலை அனுப்புமாறு துறைகளின் தலைவர்களைக் கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

******


(Release ID: 1609023) Visitor Counter : 323


Read this release in: English , Hindi , Assamese , Telugu