சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
கோவிட்-19 நோய் பற்றிய தற்போதைய நிலவரம் ,அது பரவாமல் தடுத்தல் , அதனை நிர்வகிக்கல் ஆகியன குறித்து அமைச்சர்கள் அளவிலான உயர்நிலைக் குழு ஆய்வு செய்தது..
திருத்தியமைக்கப்பட்ட பயண ஆலோசனை குறிப்புகள் வெளியீடு,
प्रविष्टि तिथि:
11 MAR 2020 7:21PM by PIB Chennai
அமைச்சர்கள் குழுவின் ஆறாவது கூட்டம், மத்திய சுகாதாரம் மற்றும்
குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் தலைமையில்இன்று நிர்மாண்
பவனில் நடைபெற்றது.
விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு ஹர்தீப் எஸ் புரி,
வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்ஷங்கர், உள்துறை இணை அமைச்சர்
திரு.நித்தியானந்த ராய், கப்பல் போக்குவரத்து , இரசாயனம் மற்றும் உரங்கள்
துறை இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) திரு. மான்சுக் மாண்டவியா, சுகாதாரம்
மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் திரு அஸ்வினி குமார் சௌபே ஆகியோர்
பங்கேற்றனர்.
அமைச்சரவை செயலர் தலைமையிலான செயலர்கள் குழுவின் பரிந்துரைகள்,
அமைச்சர்கள் குழுவில் தாக்கல் செய்யப்பட்டது
நாவல் கரோனா வைரஸ் நோய்தொற்றான கோவிட்- 19 பரவாமல் தடுக்கவும், அந்த
நோயை எதிர்கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு மற்றும் ஆயத்த,
முன்னேற்பாடு நடவடிக்கைகள் பற்றிய விரிவான விவாதங்களுக்குப் பிறகு,
அமைச்சர்கள் குழு பின்வரும் முடிவுகளை மேற்கொண்டது.
தூதரக, அதிகாராப்பூர்வ, மற்றும் ஐ. நா. \ இதர சர்வதேச அமைப்புகள்
சார்ந்த, வேலைவாய்ப்பு, திட்டங்கள் தொடர்பான விசாக்கள் - ஆகியவை
நீங்கலாக தற்போதைய அனைத்து விசாக்களும் ஏப்ரல் 15 ம் தேதி வரை ரத்து
செய்யப்படும்
இந்த விசா ரத்து, 13 மார்ச் 2020 நேரம் க்ரீன்விட்ச் நேரப்படி 1200
முதல், புறப்படும் இடத்திலிருந்து நடைமுறைக்கு வரும்.
ஓசிஐ எனப்படும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் அட்டைதாரர்களுக்கு
வழங்கப்பட்ட விசா இல்லாத பயண சேவை வசதி 15 ஏப்ரல் 2020 வரை
ஒத்திவைக்கப்படும்.
இது 13 மார்ச் 2020 நேரம் நேரம் க்ரீன்விட்ச் நேரப்படி1200 முதல்,
புறப்படும் இடத்திலிருந்து நடைமுறைக்கு வரும்.
மிக முக்கிய காரணத்திற்காக இந்தியாவிற்கு வர வேண்டிய கட்டாயம் உள்ள
அந்நிய நாட்டவர்கள், அருகேயுள்ள இந்திய தூதரகத்தைத் தொடர்பு கொள்ளலாம்.
15 பிப்ரவரி 2020 குப் பிறகு, சீனா, இத்தாலி, ஈரான், கொரிய குடியரசு,
பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி ஆகிய நாடுகளிலிருந்து வரும் இந்திய
நாட்டவர்கள் உட்பட அனைத்து பயணிகளும், -- அவர்கள் அந்த நாடுகளிலிருந்து
வருபவர்களாக இருந்தாலும், அந்த நாடுகளுக்கு, பயணம் மேற்கொண்டவர்களாக
இருந்தாலும் -- அவர்கள் 14 நாட்கள் தனிமையில் வைக்கப்படுவார்கள்.
13 மார்ச் 2020 நேரம் ஜிஎம்டி 1200 மணி முதல், இது நடைமுறைக்கு வரும்.
இந்தியாவிற்கு வரும் இந்திய நாட்டவர்கள் உட்பட, அனைத்து பயணிகளும்
தேவையற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அவர்கள் இந்தியாவிற்கு வந்தது முதல் 14 நாட்களுக்கு
தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இந்திய நாட்டவர்கள் தேவையற்ற வெளிநாட்டுப் பயணங்கள் எதையும் மேற்கொள்ள
வேண்டாம் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அவர்கள்
திரும்பி வரும்போது குறைந்தபட்சம் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படக்
கூடும்.
நில எல்லைகளின் வழியாக வரும் சர்வதேச போக்குவரத்து, வலுவான பரிசோதனை
வசதிகளுடன் கூடிய, குறிப்பிடப்பட்ட சோதனைச் சாவடிகள் மூலம் மட்டுமே
அனுமதிக்கப் படும. இது குறித்த விவரங்கள், உள்துறை அமைச்சகத்தின் மூலம்
தனியாக அறிவிக்கையாக வெளியிடப்படும்.
இத்தாலியில் உள்ள மாணவர்களுக்கும், அனுதாபத்தின் அடிப்படையில் சில
நபர்களுக்கும் பூர்வங்கப் பரிசோதனைகள் நடத்த ஏற்பாடு செய்யப்படும்.
அவர்களிடமிருந்து மாதிரிகளை சேகரித்து அனுப்புவதற்கும், உரிய நடவடிக்கை
எடுக்கப்படும். இந்த பரிசோதனையின் முடிவுகளின் படி, நோய்த் தொற்று இல்லை
என்றால், அவர்கள் தொடர்ந்து பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
இல்லாவிட்டால், அவர்கள் இந்தியாவில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்
படுவார்கள்.
(रिलीज़ आईडी: 1608595)
आगंतुक पटल : 293