தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

செஸ் நிதியை கட்டுமான தொழிலாளர்களின் நலனுக்கு பயன்படுத்திக் கொள்ள மாநிலங்கள்/யூனியன் பிரேதசங்களுக்கு தொழிலாளர் அமைச்சகம் அறிவுறுத்தல்

Posted On: 24 MAR 2020 3:32PM by PIB Chennai

கோவிட்-19 பரவலை கருத்தில் கொண்டு, தொழிலாளர்களின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. அன்றாட வருவாயை நம்பி வாழ்க்கையை நடத்தும் வரன்முறைபடுத்தப்படாத கட்டுமானதொழிலாளர்களுக்கு ஆதரவு அளிக்க, மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு சந்தோஷ் குமார் கங்க்வார், அனைத்து மாநில முதல்வர்களுக்கும் /யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார்.

மத்திய அரசின் அறிவுறுத்தலில், கட்டிடம் மற்றும் இதர கட்டுமான தொழிலாளர்கள் சட்டம், 1996ன் 60வது பிரிவின் படி, அனைத்து மாநிலங்களும்/யூனியன் பிரேதசங்களும், தொழிலாளர் நல வாரியங்களால் BOCW செஸ் சட்டத்தின் மூலம் வசூல் செய்யப்பட்ட செஸ் நிதியை, கட்டுமான தொழிலாளர்களின் கணக்குகளுக்கு நேரடி பணப் பரிமாற்றம் செய்யக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. சுமார் ரூ 52,000 கோடி செஸ் நிதியாக உள்ள நிலையில், சுமார் 3.5 கோடி கட்டுமான தொழிலாளர்கள் கட்டுமான நல வாரியங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

 

******************(Release ID: 1607990) Visitor Counter : 161


Read this release in: English , Marathi , Hindi , Gujarati