மத்திய அமைச்சரவை

மாற்றியமைக்கப்பட்ட மின்னணு உற்பத்தித் தொகுப்புகள் (EMC 2.0) திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 21 MAR 2020 4:28PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், உலக தரத்திலான கட்டமைப்புகளை உருவாக்குவதற்கும், மாற்றியமைக்கப்பட்ட மின்னணு உற்பத்தித் தொகுப்புகள் (EMC 2.0 ) திட்டத்திற்கும் நிதி ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. மின்னணு உற்பத்தித் தொகுப்புகள் (EMC-கள்) மூலம் பொதுவான வசதிகள் மற்றும் சௌகரியங்களை உருவாக்குவதும் இதில் அடங்கும். இந்த மின்னணு தொகுப்புப் பகுதிகள் மூலமாக இ.எஸ்.டி.எம். துறையில் வளர்ச்சி ஊக்குவிக்கப்படுவதுடன், தொழில் முனைவோர் சூழல் மேம்பாடு ஏற்படும், புதிய சிந்தனை உத்வேகம் பெறும், இந்தத் துறையில் புதிய முதலீடுகளை ஈர்ப்பதன் மூலம் அந்தப் பகுதியில் பொருளாதார வளர்ச்சி ஏற்படும், வேலைவாய்ப்புகள் பெருகும், வரி வருவாய் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாற்றியமைக்கப்பட்ட மின்னணு உற்பத்தித் தொகுப்புகள் (EMC 2.0 திட்டமானது, மின்னணு உற்பத்தி தொகுப்பு தொழிற்சாலைகள் (இ.எம்.சி.கள்) உருவாக்குவது மற்றும் பொதுவான வசதிகள் மையங்களை (சி.எப்.சி.கள்) உருவாக்குவது ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும். இந்தத் திட்டத்திற்காக குறைந்தபட்ச பரப்பிலான பகுதிகளில் மின்னணு உற்பத்தி தொகுப்புகள் அமைக்கப்படும். அவை அடுத்தடுத்து அமையும் வகையில் பார்த்துக் கொள்ளப்படும். அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் உருவாக்குதல், சௌகரியங்கள் மற்றும் இ.எஸ்.டி.எம். தொழில் பிரிவுகளுக்குத் தேவையான இதர பொதுவான வசதிகளை உருவாக்கித் தருவதில் கவனம் செலுத்தப்படும். பொது வசதிகள் மையத்திற்கு (சி.எப்.சி.) தற்போது இயக்கத்தில் உள்ள கணிசமான எண்ணிக்கையிலான இ.எஸ்.டி.எம்.கள்  அந்தப் பகுதியில் இருக்க வேண்டும். பொதுவான தொழில்நுட்ப கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், இ.எம்.சி.கள் / தொழில் மண்டலப் பகுதிகள் / தொழிற்பூங்காக்கள்/ தொழில் வளாகத்தட பகுதிகளில் உள்ள ஈ.எஸ்.டி.எம். பிரிவுகளுக்கு பொதுவான சௌகரியங்களை ஏற்படுத்துதல், ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும்.

நிதியளவிலான தாக்கங்கள்

உத்தேசிக்கப்பட்டுள்ள இ.எம்.சி. 2.0 திட்டத்துக்கான மொத்த மதிப்பீடு ரூ.3,762.25 கோடி இதில் நிதியுதவியாக ரூ.3725 கோடி வழங்கப்படும். நிர்வாகம் மற்றும் மேலாண்மைச் செலவுகளுக்கு ரூ.37.25 கோடி வரை செலவிடப்படும்.

பயன்கள்

இ.எஸ்.டி.எம். துறையில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், மின்னணு தொழிற்சாலைகளுக்கு வலுவான கட்டமைப்பு வசதிகளை உருவாக்கித் தரும் வகையில் இந்தத் திட்டம் இருக்கும். இதனால் வேலைவாய்ப்புகள் பெருகும். இந்தத் திட்டத்தால் பின்வரும் பயன்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது:

  1. ஆயத்த நிலையிலான கட்டமைப்பு வசதிகள் இருக்கும். தொழில் தொடங்கும் வாய்ப்பு இருப்பதால் மின்னணு துறையில் முதலீடுகளை ஈர்க்க முடியும்;
  2. மின்னணு துறையில் புதிய முதலீடுகள் வரும்;
  3. உற்பத்திப் பிரிவுகள் மூலமாக வேலைவாய்ப்புகள் பெருகும்;
  4. உற்பத்திப் பிரிவுகள் வரிகள் செலுத்துவதன் மூலம் அரசுக்கு வருவாய் கிடைக்கும்.

(Release ID: 1607880) Visitor Counter : 293