வெளியுறவுத்துறை அமைச்சகம்

இந்தியாவுக்கும் பெல்ஜியத்துக்கும் இடையில் நாடு கடத்தும் ஒப்பந்தத்திற்கு ஏற்பளிப்பு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 21 MAR 2020 4:19PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தியாவுக்கும் பெல்ஜியத்துக்கும் இடையில் நாடு கடத்தும் ஒப்பந்தத்திற்கு ஏற்பளிப்பு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

சிறப்பம்சங்கள்

ஒப்பந்தத்தின் சிறப்பம்சங்கள் பின்வரும் வகைகளில் இருக்கும்:

நாடு கடத்தி அனுப்பும் கட்டாயக் கடமை

இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள ஏதாவது ஒரு நாட்டில், கையெழுத்திட்டுள்ள இன்னொரு நாட்டில் குற்றஞ்சாட்டப்பட்ட அல்லது தண்டனை பெற்ற நபர் இருப்பதாகத் தெரிய வந்தால் அவரைப் பிடித்து நாடுகடத்தி அனுப்பி வைக்க ஒப்புக்கொள்ளப்படுகிறது.

ஒப்படைக்கும் அவசியம் உள்ள குற்றங்கள்

பிடித்து ஒப்படைக்க வேண்டிய அளவிற்கான குற்றங்கள் என்பது, இரு நாடுகளிலும் ஓராண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட காலத்துக்கு கடும் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டங்களின் கீழ் குற்றம்  இழைத்தவராக இருப்பார். குற்றவாளி ஒருவரை பிடித்து ஒப்படைக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டால், கோரிக்கை வைக்கும் சமயத்தில், அந்த நபர் இன்னும் ஆறு மாதங்களுக்கு மேல் தண்டனையை கழிக்க வேண்டியவராக இருத்தல் வேண்டும். வரி விதிப்பு அல்லது வருவாய் அல்லது நிதி சார்ந்த ஏதாவது ஒரு செயல்பாடு ஆகியவற்றின் கீழான குற்றங்கள் இந்த ஒப்பந்தத்தின் வரம்பிற்குள் வரும்.

மறுக்கும் உரிமைக்கான காரணங்கள்

இந்த ஒப்பந்தத்தின் கீழ், பின்வரும் காரணங்களால் கோரிக்கை மறுக்கப்படலாம்:

அரசியல் குற்றமாக இருந்தால் மறுக்கலாம். இருந்தபோதிலும், அரசியல் குற்றங்களாக எவையெல்லாம் வராது என்று சில குற்றச் செயல்கள் இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

ராணுவக் குற்றச் செயலுக்காக நாடு கடத்த அனுமதி கோரினால் மறுக்கலாம்.

இனம், மதம், பாலினம், நாடு பாகுபாடு அடிப்படையிலோ அல்லது அரசியல் கருத்து வேறுபாடு காரணமாகவோ தண்டிக்க வேண்டும் என்ற காணத்திற்காக மட்டும் தொடரும் வழக்கின் அடிப்படையிலானதாக இருந்தால் மறுக்கலாம்.

தண்டனைக் காலத்தை அமல் செய்வதற்கான வழக்கு காலாவதியாகி இருந்தால் மறுக்கலாம்.

தேசத்தவர்களை நாடு கடத்துதல்

தங்கள் தேசத்தவர்களை நாடுகடத்தி அனுப்புவது விருப்ப உரிமை அடிப்படையிலானது. குற்றம் நடந்தபோது அவர் எந்த தேசத்தவராக இருந்தார் என்ற அடிப்படையில் அது முடிவு செய்யப்படும்.

 

-----


(Release ID: 1607877) Visitor Counter : 135


Read this release in: Telugu , English , Hindi , Kannada