ரெயில்வே அமைச்சகம்

ரயில்வே மண்டலங்களில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான தயார் நிலை குறித்து ரயில்வே அமைச்சர் திரு பியூஷ் கோயல் ஆய்வு

கொவிட்-19 விரைவு பதிலடிக் குழுவை இந்திய ரயில்வே அமைத்துள்ளது
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளை அப்போதைக்கு அப்போதே கண்காணிக்கும் ஆன் லைன் கண்காணிப்புப் பலகை செயல்படத் தொடங்கியது

Posted On: 18 MAR 2020 2:30PM by PIB Chennai

நாட்டின் மிகப்பெரிய போக்குவரத்து நிறுவனமான இந்திய ரயில்வே, கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தாமாகவே முன்வந்து பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.  இது தொடர்பாக நடைபெற்றுவரும் செயல்பாடுகளையும், இந்த வகையில் ரயில்வேயின் தயார் நிலை நிலவரத்தையும் ரயில்வே அமைச்சர் திரு பியூஷ் கோயல் ஆய்வு செய்தார். ஆய்வுக்கூட்டத்தில் ரயில்வே வாரியத் தலைவர், ரயில்வே வாரிய உறுப்பினர்கள் ஆகியோருடன், பொதுமேலாளர்கள், ரயில்வே மண்டல மேலாளர்கள் ஆகியோரும் காணொலி மூலம் பங்கேற்றனர்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கீழ்கண்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக ரயில்வே வாரியத் தலைவர் தெரிவித்தார்.

  1. ரயில்வே கட்டமைப்பின் அனைத்து இடங்களிலும் தனிமைப்படுத்தி வைக்கும் வசதிகளை ஏற்படுத்துதல்,
  2. மத்திய சுகாதார குடும்பநல அமைச்சகம், பணியாளர் மற்றும் பயிற்சித்துறை ஆகியன வழங்கும் ஆலோசனைக் குறிப்புகளை அனைவருக்கும் கிடைக்கச் செய்தல்
  3. பல்வேறு ரயில் நிலையங்களில் உதவி மையங்களை அமைத்தல்
  4. ரயில்பெட்டிகள், கழிவறைகள், சமையல் பெட்டிகள் போன்றவற்றில் தூய்மையைப் பராமரித்தல்
  5. நோய் தொற்று சோதனை மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு உரிய கருவிகளைக் கிடைக்கச் செய்தல்
  6. பொதுமக்கள் விழிப்புணர்வுக்கென ரயில் நிலையங்களில் உள்ள ஒலிபெருக்கு வாயிலாக அறிவிப்புகளை வெளியிடுதல்
  7. நடைமேடை டிக்கெட் கட்டணத்தை உயர்த்துவது உள்ளிட்ட ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டத்தை தவிர்க்கும் நடவடிக்கைகள்

இந்திய ரயில்வேயின் முயற்சிகளைப் பாராட்டிய அமைச்சர், இந்த நோய்த் தொற்றுக்கு எதிரான போரில் வெற்றியடையும் வரை கடின உழைப்புடன் கூடிய முயற்சிகளை தொடருமாறு கேட்டுக்கொண்டார். இந்திய ரயில்வே பணியாளர்களின் கடின உழைப்புக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்திருப்பதை அமைச்சர் சுட்டிக்காட்டினார.

தொடர்ச்சியான கண்காணிப்புக்கென கீழ்கண்ட கூடுதல் நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படும் என்று அமைச்சர் அறிவித்தார்.

  1. அமைச்சகத்தின் அதிகாரிகள், மண்டல ரயில்வே அதிகாரிகள் ஒருங்கிணைப்புக்கான ஆன் லைன் கண்காணிப்புப் பலகை அமைத்தல்
  2. கொவிட்-19 விரைவு பதிலடிக் குழுவை, ரயில்வே வாரியத்தின 6 நிர்வாக இயக்குனர்களை உறுப்பினர்களாகக் கொண்டு அமைத்தல்
  3. அத்தியாவசியமற்ற ரயில் பயணங்களைத் தவிர்க்குமாறு மக்களுக்கு ஆலோசனை கூறுதல்

மேலே குறித்த உத்தரவுகள் அமல்படுத்தப்படுவது குறித்து தொடர்ச்சியாக கண்காணிக்கப்படும்.

                                ************

(Release ID: 1606871)   

 


(Release ID: 1606917) Visitor Counter : 199