அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

ஹிமாலயன் உயிரி ஆதார தொழில்நுட்ப நிறுவனம் (ஐ ஹெச் பி டி) புதிய கிருமி நாசினியை உருவாக்கியுள்ளது இயற்கையான நறுமணம், தேயிலை மற்றும் ஆல்கஹாலின் பகுதிப்பொருட்கள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன

பாராபென், ட்ரைக்குளோசான், செயற்கை நறுமணம், தாலேட்டுகள் போன்றவை இதில் பயன்படுத்தப்படவில்லை

Posted On: 18 MAR 2020 10:44AM by PIB Chennai

கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் கிருமி நாசினி போன்ற பொருட்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. பல போலியான பொருட்களும் விற்பனைக்கு வரத்தொடங்கியுள்ளன. இதனைக் கருத்தில்கொண்டு அறிவியல் தொழிலியல் ஆராய்ச்சி சபை (சி எஸ் ஐ ஆர்)-ல் அங்கம் வகிக்கும் இமாச்சலப்பிரதேசத்தில் பாலாம்பூரில் உள்ள ஷிமாலயன் உயிரிஆதார தொழில்நுட்ப நிறுவனம் (ஐ ஹெச் பி டி) கை கழுவுவதற்கான புதிய கிருமி நாசினியை உருவாக்கியுள்ளது.

     இதுபற்றித் தகவல் தெரிவித்த ஐ ஹெச் பி டி-யின் இயக்குனர் டாக்டர் சஞ்சய் குமார், “இயற்கையான நறுமணம், தேயிலை மற்றும் ஆல்கஹாலின் பகுதிப்பொருட்கள் போன்றவை உலக சுகாதார அமைப்பின் நெறிகளின்படி, இந்தப் புதிய கிருமி நாசினியில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதில் பாராபென், ட்ரைக்குளோசான், செயற்கை நறுமணம், தாலேட்டுகள் போன்ற ரசாயனப்பொருட்கள் ஏதும் பயன்படுத்தப்படவில்லை” என்று கூறினார்.

     இந்தப்புதிய கிருமி நாசினிப் பொருளை வர்த்தக ரீதியில் உற்பத்தி செய்வதற்கென அதன் தொழில்நுட்பம் பாலாம்பூரில் உள்ள ஏ. பி. சயின்டிஃபிக் சொலியுசன்ஸ் என்ற நிறுவனத்திடம் அளிக்கப்பட்டுள்ளது.  இதற்கான ஒப்பந்தத்தை இந்த நிறுவனத்துடன் சி எஸ் ஐ ஆர் – ஐ ஹெச் பி டி செய்துகொண்டுள்ளது.

     தனக்குச் சொந்தமான, வலுவான, நாடெங்கும் அமைந்துள்ள சந்தைக் கட்டமைப்பை கொண்டுள்ள இந்த நிறுவனம், இந்தப் புதிய கிருமி நாசினியின் வர்த்தக உற்பத்திக்கென புதிய தொழில்கூடத்தை ஏற்படுத்தவுள்ளது.  நாடெங்கும் உள்ள அனைத்து பெரிய நகரங்களிலும் இதனை விற்பனை செய்யும் பொறுப்பையும் அது ஏற்றுள்ளது.

கை கழுவும் கிருமி நாசினி பொருட்களுக்கான தேவை நாடெங்கும் திடீரென உயர்ந்துள்ள நிலையில், இவற்றிற்கு மிக அதிகமான விலைகள் நிர்ணயிக்கப்படுகின்றன என்று டாக்டர் சஞ்சய் குமார் கூறினார்.  சரியான கிருமி நாசினி பொருட்களின் தற்போதையத் தேவையைக் கருத்தில்கொண்டு உரிய தருணத்தில், தமது நிறுவனம் இந்த புதிய பொருளை உருவாக்கியிருப்பதாக அவர் தெரிவித்தார்.

                          **********

(Release ID: 1606851)


(Release ID: 1606881) Visitor Counter : 161