தேர்தல் ஆணையம்
மாநிலங்களவையில் காலியிடங்களை நிரப்புவதற்கான 2 ஆண்டுக்கு ஒருமுறையான தேர்தல்
Posted On:
25 FEB 2020 11:14AM by PIB Chennai
17 மாநிலங்களைச் சேர்ந்த 55 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவி காலம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அவர்கள் ஓய்வு பெறுவதை அடுத்து முடிவுக்கு வருகிறது. இந்த பதவியிடங்கள் பற்றிய விவரம் வருமாறு:
வ.எண்
|
மாநிலம்
|
இடங்களின் எண்ணிக்கை
|
ஓய்வு பெறும் தேதி
|
-
|
மகாராஷ்டிரா
|
7
|
02.04.2020
|
-
|
ஒடிசா
|
4
|
-
|
தமிழ்நாடு
|
6
|
-
|
மேற்கு வங்கம்
|
5
|
-
|
ஆந்திரப் பிரதேசம்
|
4
|
09.04.2020
|
-
|
தெலங்கானா
|
2
|
-
|
அசாம்
|
3
|
-
|
பீகார்
|
5
|
-
|
சத்தீஸ்கர்
|
2
|
-
|
குஜராத்
|
4
|
-
|
அரியானா
|
2
|
-
|
இமாச்சலப் பிரதேசம்
|
1
|
-
|
ஜார்க்கண்ட்
|
2
|
-
|
மத்தியப் பிரதேசம்
|
3
|
-
|
மணிப்பூர்
|
1
|
-
|
ராஜஸ்தான்
|
3
|
-
|
மேகாலயா
|
1
|
12.04.2020
|
மேலே குறித்த மாநிலங்களவையில் உள்ள காலியிடங்களுக்கான
2 ஆண்டுக்கு ஒருமுறை தேர்தலை கீழ்கண்ட அட்டவணையின்படி நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
வ.எண்.
|
நிகழ்வு
|
தேதி
|
1.
|
அறிவிக்கை வெளியிடுதல்
|
06 மார்ச் 2020 (வெள்ளிக்கிழமை)
|
2.
|
வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள்
|
13 மார்ச் 2020 (வெள்ளிக்கிழமை)
|
3.
|
வேட்பு மனு பரிசீலனை
|
16 மார்ச் 2020 (திங்கட்கிழமை)
|
4.
|
வேட்பு மனுக்களை விலக்கிக் கொள்ள கடைசி நாள்
|
18 மார்ச் 2020 (புதன்கிழமை)
|
5.
|
தேர்தல் நாள்
|
26 மார்ச் 2020 (வியாழக்கிழமை)
|
6.
|
வாக்குப்பதிவு நேரம்
|
காலை மணி 09.00 முதல் மாலை மணி 04.00 வரை
|
7.
|
வாக்கு எண்ணிக்கை நாள்
|
26 மார்ச் 2020 (வியாழக்கிழமை) மாலை மணி 05.00
|
8.
|
தேர்தல் நடைமுறை முடிக்கப்பட வேண்டிய நாள்
|
30 மார்ச் 2020 (திங்கட்கிழமை)
|
தேர்தலில் வாக்குச்சீட்டுகளின் மேல் வாக்காளர்கள் தங்கள் விருப்பங்களை பதிவு செய்வதற்கு தேர்தல் அதிகாரி வழங்கும் குறிப்பிட்ட அளவுகள் உள்ள ஒருங்கிணைந்த ஊதா ஸ்கெட்ச் பேனாக்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். இந்த தேர்தலில் வேறு எந்த பேனாவும் எந்த சூழ்நிலையிலும் பயன்படுத்தக் கூடாது.
சுயேச்சையான, நியாயமான தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்ய பார்வையாளர்கள் நியமனம் உள்ளிட்ட தேர்தல் நடைமுறையை கண்காணிப்பதற்கான போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
********
(Release ID: 1604295)
Visitor Counter : 139