தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

70-ஆவது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய தொடர்பு விழா

प्रविष्टि तिथि: 21 FEB 2020 9:54AM by PIB Chennai

பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவின் முதல் நாளில், மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம், இந்திய தொழில் கூட்டமைப்புடன் சேர்ந்து இந்திய தொடர்பு விழாவின் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.  இந்த நிகழ்ச்சியில் திரைப்பட விழாவின் முக்கிய பிரமுகர்கள், சர்வதேச திரைப்பட சங்கங்கள், திரைப்பட முகமைகள், பிரபல தயாரிப்பு நிறுவனங்களின் பிரதிநிதிகளும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

     இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடைபெறவுள்ள 51-ஆவது இந்திய சர்வதேச  திரைப்பட விழாவுக்கான கூட்டு முயற்சிகளை முன்னெடுப்பது, திரைப்படங்களை இணைந்து தயாரிப்பது ஆகியவை குறித்த விவாதத்தில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது. இந்தியாவில் திரைப்படங்களை எளிதாக படமாக்குவதற்கு அரசு எடுத்துள்ள கொள்கை முன்முயற்சிகள் குறித்து, (www.ffo.gov.in) என்ற வலைதளத்தின் மூலம், கலந்து கொண்டவர்களுக்கு விளக்கப்பட்டது.  இது படப்பிடிப்புகளுக்கு அணுகுவதற்கான ஒற்றை அம்சமாக உள்ளது.

     இந்திய தொடர்பு விழாவில் 80 முதல் 100 பேர் வரை பங்கேற்றனர். தூதுக்குழுவினர், கலைடாஸ்கோப் எண்டர்டைன்மெண்ட் உரிமையாளரும், நிர்வாக இயக்குநருமான திரு.பாபி பேடி, இந்தோ-ஜெர்மன் பிலிம்ஸ் நிறுவனர் ஸ்டீஃபன் ஆட்டன்பிரஜ், பெர்லின் சர்வதேச திரைப்படவிழாவின் மார்க்கெட்டிங், அட்வர்டைசிங் தலைவர் ஜனா உல்ஃப், கேட்டலுன்யா ஃபிலிம் கமிஷனின் கார்லேட்டா குரேரா பெர்னாஸ் உள்ளிட்டோரை சந்தித்துப் பேசினர்.

     இந்திய சர்வதேச திரைப்பட விழா 2020 மற்றும் இந்தியாவுடன் சேர்ந்து செயலாற்றுவது குறித்த விருப்பத்தை பங்கேற்பாளர்கள் வெளியிட்டனர். இது திரைப்படத் தயாரிப்புக்கான அடுத்த இடமாகவும், ஊடகம் மற்றும் கேளிக்கை தொழிலுக்கான மேக் இன் இந்தியா வாய்ப்புகளின் வளர்ச்சிக்கும் பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

      

 

 

*****



 


(रिलीज़ आईडी: 1603915) आगंतुक पटल : 227
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Urdu , Marathi , हिन्दी , Gujarati , Bengali , English