மத்திய அமைச்சரவை

மூன்றாண்டு காலத்திற்கான 22-வது இந்திய சட்ட ஆணையத்தை அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

Posted On: 19 FEB 2020 4:40PM by PIB Chennai

22-வது இந்திய சட்ட ஆணையத்தை அமைப்பதற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான உத்தரவு அரசிதழில் வெளியிடப்பட்ட தேதியிலிருந்து மூன்றாண்டு காலத்திற்கு இந்த ஆணையம் செயல்படும்.

பயன்கள்:

      பல்வேறு சட்ட அம்சங்களை ஆய்வு செய்யும் இந்த தனித்துவ அமைப்பின் பரிந்துரைகள் அரசுக்குப் பயனுள்ளவையாக இருக்கும். இதன் ஆய்வு மற்றும் பரிந்துரைகள் மீது அரசு நம்பிக்கை கொண்டுள்ளது.

     தற்போதுள்ள சட்டங்களில் சீர்திருத்தம் செய்வது அல்லது புதிய சட்டங்களை இயற்றுவது ஆகியவை குறித்து அரசின் வரம்புகளுக்கு உட்பட்டு அல்லது தாமாக முன்வந்து சட்ட ஆணையம் ஆய்வுகளை மேற்கொள்ளலாம். நீதித்துறையில் காணப்படும் நடைமுறை தாமதங்களை நீக்குவது, வழக்குகளை விரைந்து பைசல் செய்வது, வழக்குகளுக்கு ஆகும் செலவை குறைப்பது ஆகியவற்றில் சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதற்கான ஆய்வுகளையும் இது மேற்கொள்ளும்.

 

     இந்த ஆணையம் கீழ்க்கண்டவாறு அமைந்திருக்கும்:

 

  • ஒரு முழுநேர தலைவர்
  • நான்கு முழுநேர உறுப்பினர்கள் (உறுப்பினர் - செயலாளர் உட்பட)
  • சட்டத்துறை செயலாளர் – அலுவல் சாரா உறுப்பினராக
  • சட்டம் இயற்றும் துறை செயலாளர் – அலுவல் சாரா உறுப்பினராக
  • ஐந்துக்கும் மிகாமல் பகுதிநேர உறுப்பினர்கள்

•••••••••••


(Release ID: 1603724) Visitor Counter : 318