சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்

இடம்பெயரும் பறவை இனங்கள் தொடர்பான ஐநா அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளது


இடம்பெயரும் பறவைகள் மற்றும் வாழ்விடம் தொடர்பான மாநாடு இந்தியாவில் நடைபெறுவது இவற்றின் மீதான சிறப்புக் கவனத்தின் தொடக்கமாகும்: மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர்

Posted On: 17 FEB 2020 2:05PM by PIB Chennai

இடம்பெயரும் பறவை இனங்கள் தொடர்பான ஐநா அமைப்பின் 13-ஆவது மாநாடு காந்தி நகரில் இன்று (17.02.2020), 130 நாடுகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகள், சுற்றுச்சூழல் வழக்கறிஞர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் உயிரி பன்முகத் தன்மை வல்லுநர்கள் முன்னிலையில் தொடங்கியது.  பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலிக் காட்சி வாயிலாக இந்த ஐநா மாநாட்டைத் தொடங்கி வைத்தார். 

இந்த மாநாட்டில், இடம்பெயரும் பறவைகளுக்கான ஐநா அமைப்பின் அடுத்த மூன்றாண்டுகளுக்கான தலைமைப் பொறுப்பை இந்தியா இன்று ஏற்றுக் கொண்டது.  இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் திரு பிரகாஷ் ஜவ்டேகர், இடம்பெயரும் பறவைகள் தொடர்பான மாநாடு இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானது என்றார்.  இது வளர்ச்சியை மேற்கொள்வதற்கான மிகச்சிறந்த தருணம் என்று குறிப்பிட்ட அவர், இந்த மாநாடு இந்தியாவில் நடைபெறுவது இடம்பெயரும் பறவைகள் மற்றும் அவற்றின் வாழ்விடங்கள் மீது சிறப்புக் கவனம் செலுத்துவதற்கான தொடக்கத்தைக் குறிப்பதாகவும்  தெரிவித்தார். 

“இடம்பெயரும் பறவைகள், பாலூட்டிகள் மற்றும் நீர்வாழ் உயிரினங்கள், இடம்பெயரும் போது, அதிகளவில் அழிவை சந்திக்க வேண்டியிருப்பதாக கூறிய அமைச்சர், இவற்றை பாதுகாக்க சம்பந்தப்பட்ட நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்றும் தெரிவித்தார்.

இந்தியாவைப் பொறுத்தவரை, பூமியில் உள்ள அனைத்து விலங்குகள் மற்றும் இயற்கையான வாழ்வுமுறையை பாதுகாக்க உறுதிபூண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.  எனவே, இந்த மாநாட்டை நடத்துவதில் இந்தியா மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகவும் மத்திய அமைச்சர் குறிப்பிட்டார்.

******



(Release ID: 1603475) Visitor Counter : 211


Read this release in: English , Hindi , Marathi , Gujarati