உள்துறை அமைச்சகம்

பிம்ஸ்டெக் நாடுகள் பங்கேற்கும் ‘போதைப் பொருள் கடத்தல் தடுப்பு மாநாட்டினை’ மத்திய உள்துறை அமைச்சர் புதுதில்லியில் நாளை தொடங்கிவைக்கிறார்

Posted On: 12 FEB 2020 11:41AM by PIB Chennai

பிம்ஸ்டெக் (பலவகை தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்முயற்சி) நாடுகள் பங்கேற்கும் ‘போதைப் பொருள் கடத்தல் தடுப்பு மாநாட்டினை’ மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா புதுதில்லியில் நாளை தொடங்கிவைக்கிறார்

     2018-ல் காட்மாண்டுவில் நடைபெற்ற நான்காவது பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டில், பிரதமர் திரு. நரேந்திர மோடி அளித்த வாக்குறுதியைத் தொடர்ந்து, போதைப் பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு இந்த மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளது.  போதைப் பொருள் கடத்தலால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் குறித்தும், உறுப்புநாடுகள் பின்பற்றும் சிறந்த நடைமுறைகளில் இருந்து கற்றறிந்து இந்த அச்சுறுத்தல்களை முறியடிக்கத் தேவையான கூட்டு நடவடிக்கைகள் குறித்தும் விவாதிப்பதற்கு அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் இந்த மாநாடு வாய்ப்பை வழங்கும் என்று நம்பப்படுகிறது. பிம்ஸ்டெக் அமைப்பின் ஒவ்வொரு நாட்டிலிருந்தும் தூதுக்குழுக்கள் இந்த மாநாட்டில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளன.  மேலும் இந்தியாவில் இருந்து போதைப் பொருள் தடுப்பு சட்டங்களை அமலாக்கும் மத்திய மாநில முகமைகளும், மற்ற உறுப்புநாடுகளின் முகமைகளும் அழைக்கப்பட்டுள்ளன.

     வங்கக் கடலின் அருகேயும், கரையோரப் பகுதிகளிலும் உள்ள நாடுகள், அதாவது, இந்தியா, பங்களாதேஷ், பூடான், மியான்மர், நேபாளம், இலங்கை, தாய்லாந்து ஆகியவை பிம்ஸ்டெக் அமைப்பின் உறுப்பு நாடுகளாக உள்ளன.  

 

*****



(Release ID: 1603009) Visitor Counter : 146