நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம்
தனிநபர் தகவல் பாதுகாப்பு மசோதா 2019 குறித்த கூட்டுக்குழு, கருத்துக்களையும் ஆலோசனைகளையும் கோரியுள்ளது
Posted On:
03 FEB 2020 2:03PM by PIB Chennai
தனிநபர் தகவல் பாதுகாப்பு மசோதா 2019 மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க திருமதி மீனாட்சி லெகி (புதுதில்லி) எம்பி, தலைமையிலான இரு அவைகளின் நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த மசோதா குறித்து தனிநபர்கள், சங்கங்கள், அமைப்புகளிடமிருந்து கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பெறுவது என இது முடிவு செய்துள்ளது. தனிநபர் தகவல் மசோதா 2019 மக்களவை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது (loksabha.nic.in>legislations>bills introduced>Bill No. 373).
இந்தக்குழுவுக்கு கருத்துக்கள் / ஆலோசனைகள் தெரிவிக்க விரும்புவோர் ஆங்கிலம் அல்லது இந்தியில் எழுதி இரண்டு நகல்களை இயக்குனர், மக்களவைச் செயலகம், அறை எண். 152, நாடாளுமன்ற இல்லம் அனெக்ஸ், புதுதில்லி 110 001 என்ற முகவரிக்கு அல்லது jpc-datalaw@sansad.nic.in / mrs.mlekhi@sansad.nic.in என்ற மின்னஞ்சல் முகவரிகளுக்கு மூன்று வாரங்களுக்குள் அனுப்பிவைக்கலாம்.
இவ்வாறு குழுவுக்கு அளிக்கப்படும் மனு குழுவின் ஆவணங்களின் ஒரு பகுதியாக இருக்கும். இவை ரகசியமானதாக கருதப்படும்.
மனு அளித்ததோடு குழுவின்முன் நேரில் ஆஜராக விரும்புவோர் இதனைத் தனியாகக் குறிப்பிட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இருப்பினும் தலைவரின் முடிவே இதில் இறுதியானதாக இருக்கும்.
****
(Release ID: 1601744)
Visitor Counter : 249