நிதி அமைச்சகம்
‘பாரத் நெட்’ திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் கிராமப் பஞ்சாயத்துக்களை இணைக்க ரூ.6,000 கோடி
Posted On:
01 FEB 2020 2:12PM by PIB Chennai
‘பாரத்நெட்’ மூலம் இந்த ஆண்டில் ஒரு லட்சம் கிராமப் பஞ்சாயத்துகள் கண்ணாடி இழைக்கற்றை வாயிலாக இணைக்கப்படும் என்றும் கிராமப் பஞ்சாயத்து அளவில் அங்கன்வாடி, சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்கள், அரசுப் பள்ளிகள் போன்ற அனைத்து பொது அமைப்புகளுக்கும் டிஜிட்டல் இணைப்பை வழங்கும் நோக்கம் இதன் மூலம் நிறைவேற்றப்படும் என்றும் பாரத் நெட் திட்டத்தின் இந்த நோக்கத்திற்காக 2020-21 ஆம் ஆண்டில் ரூ.6,000 கோடி வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் தேசிய குவாண்டம் தொழில்நுட்பங்கள் மற்றும் பயன்பாடுகள் திட்டத்திற்கு ரூ.8,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் நாடு முழுவதும் புள்ளி விவர கட்டமைப்பு பூங்காக்கள் அமைக்கப்படும் என்றும் மத்திய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
அறிவுசார் பரிமாற்றம் மற்றும் தொழில்நுட்ப குழுமங்கள் மூலம் புதிதாகத் தொடங்கப்படும் நிறுவனங்களுக்கு ஊக்கம் அளிக்கப்படும் என்றார் அவர்.
ஏ-1, IoT, 3D பிரிண்டிங்ஸ் எனப்படும் முப்பட்டக அச்சகம், ஆளில்லா குட்டி விமானங்கள், டிஎன்ஏ தரவுகள் சேமிப்பு, குவாண்டம் கம்ப்யூட்டிங் போன்ற புதிய தொழில்நுட்பங்கள் வாயிலாக உலக பொருளாதார நிலையை இந்தியா மறுஉருவாக்கம் செய்துள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
----
(Release ID: 1601543)
Visitor Counter : 249