நிதி அமைச்சகம்

2020-21 மத்திய பொது பட்ஜெட்டின் அச்சுப்பணிகள் அல்வா விழாவுடன் தொடங்கின

Posted On: 20 JAN 2020 12:43PM by PIB Chennai

2020-21 மத்திய பொது பட்ஜெட்டுக்கான அச்சுப்பணிகள் தொடக்கத்தைக் குறிக்கும் விதமாக மத்திய நிதி மற்றும் கார்பரேட் விவகாரங்கள் அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் முன்னிலையில் இன்று காலை நார்த் பிளாக்கில் அல்வா விழா நடைபெற்றது.

 

     2020-21 மத்திய பொது பட்ஜெட் 2020 பிப்ரவரி ஒன்றாம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. பட்ஜெட்டின் ரகசியத் தன்மையைப் பாதுகாப்பதற்காக பட்ஜெட் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் “பூட்டிய அறைக்குள்” இருப்பார்கள்.   நார்த் பிளாக் அமைந்துள்ள இடத்தில் இருக்கும் பட்ஜெட் அச்சகத்தில் அனைத்து அலுவலர்களும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் வரை இருப்பார்கள்.  மத்திய நிதியமைச்சர் நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்த பிறகுதான், இந்த அதிகாரிகளும், ஊழியர்களும் தங்களின் உறவினர்களை சந்திக்க முடியும்.

     அல்வா விழாவில், திருமதி நிர்மலா சீதாராமனுடன், மத்திய நிதி மற்றும் கார்பரேட் விவகாரங்கள் துறை இணையமைச்சர் திரு அனுராக் சிங் தாகூர் ; நிதித்துறை செயலாளர் திரு ராஜீவ் குமார் பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் திரு. அதானு சக்ரவர்த்தி, வருவாய்த் துறை செயலாளர் டாக்டர் ஏ பி பாண்டே, முதலீடு மற்றும் பொதுச்சொத்து மதிப்பீட்டுத் துறை செயலாளர் திரு துஹின் காந்த பாண்டே, செலவினத்துறை செயலாளர் திரு டி வி சோமநாதன் மற்றும் நிதியமைச்சக அதிகாரிகள் இருந்தனர். 

 

 

     பட்ஜெட் தயாரிப்பு மற்றும் அச்சிடும் பணிகளில் தொடர்புடைய நேரடி வரிகள் வாரியத் தலைவர் திரு. பி சி மோடி, மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத் தலைவர் திரு ஜான் ஜோசப், இந்த இரு வாரியங்களின் உறுப்பினர்கள், இணைச் செயலாளர் (பட்ஜெட்) திரு.ரஜத் மிஸ்ரா மற்றும் நிதியமைச்சக அதிகாரிகள், ஊழியர்கள் இந்த விழாவில் பங்கேற்றனர். பின்னர், அச்சகத்தை சுற்றிப் பார்த்த நிதியமைச்சர், பட்ஜெட் அச்சாக்க நடைமுறைகளைத் தாமும் தெரிந்துகொண்டார்.

*****



(Release ID: 1599840) Visitor Counter : 191