பிரதமர் அலுவலகம்

பிரதமர் திரு நரேந்திர மோடியை ஈரான் இஸ்லாமியக் குடியரசின் வெளியுறவு அமைச்சர் டாக்டர் ஜாவேத் ஸரீஃப் சந்தித்தார்

Posted On: 15 JAN 2020 6:15PM by PIB Chennai

2020 ரெய்சினா பேச்சுவார்த்தைக்காக இந்தியா வந்துள்ள ஈரான் இஸ்லாமியக் குடியரசின் வெளியுறவு அமைச்சர் டாக்டர் ஜாவேத் ஸரீஃப் பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று (15.01.2020) சந்தித்தார்.

    

     டாக்டர் ஸரீஃபை இந்தியாவுக்கு வரவேற்ற பிரதமர், 2019 செப்டம்பரில் ஐ.நா. பொதுச் சபை கூட்டத்திற்கு இடையே நியூயார்க்கில் அதிபர் ரொஹானியுடன் தாம் மேற்கொண்ட இனிய இணக்கமான விவாதங்களை நினைவுகூர்ந்தார்.   ஈரானுடன் வலுவான, நட்பு ரீதியான உறவுகளை மேம்படுத்தும் இந்தியாவின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை அவர் வலியுறுத்தினார். சபஹார் திட்டத்தை சிறப்புப் பொருளாதார மண்டலமாக வடிவமைத்திருப்பது உள்ளிட்ட வளர்ச்சிக்கான ஈரானின் தலைமைத்துவத்திற்கு அவர் நன்றி தெரிவித்தார்.

 

     இந்தப் பிராந்தியத்தில் அண்மையில் ஏற்பட்டுள்ள நிகழ்வுகள் குறித்த  தமது கருத்துகளை வெளியுறவு அமைச்சர் பகிர்ந்து கொண்டார். இந்தப் பிராந்தியத்தின் அமைதி, பாதுகாப்பு, நிலைத்தன்மை ஆகியவற்றில் இந்தியாவின் வலுவான ஆர்வத்தைப் பிரதமர் எடுத்துரைத்தார்.

 

----

 



(Release ID: 1599554) Visitor Counter : 137