ரெயில்வே அமைச்சகம்
இ- அலுவலக நிர்வாகத்தின் 2ஆம் கட்டத்திற்கு இந்திய ரயில்வே ரயில்டெல் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது
2ஆம் கட்டத்தில், 34 ரயில்வே கோட்டங்களில் 2020 ஜூன் 30க்குள் என்ஐசி இ-அலுவலக தொகுப்பில் 39000 பயனாளிகளை ரயில்டெல் பதிவு செய்யும்
1ஆம் கட்டத்தில் இந்திய ரயில்வேயின் 58 பிரிவுகள் ரயில்டெல் நிறுவனத்தால் காகிதமில்லா அலுவலகங்களாக மாற்றப்பட்டுள்ளன
Posted On:
13 JAN 2020 12:51PM by PIB Chennai
58 பிரிவுகளில் 50000 பயனாளிகளுக்கான என்ஐசி இ-அலுவலக செயல்பாடு 1ஆம் கட்டத்தில் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டப்பின் ரயில்வே அமைச்சகத்தின்கீழ் உள்ள பொதுத்துறை மினிரத்னாவான ரயில்டெல் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்திய ரயில்வே கையெழுத்திட்டுள்ளது. 2ஆம் கட்டத்தில், 34 ரயில்வே கோட்டங்களில் 2020 ஜூன் 30க்குள் என்ஐசி இ-அலுவலக தொகுப்பில் 39000 பயனாளிகளை ரயில்டெல் பதிவு செய்யும். 1ஆம் கட்ட என்ஐசி இ-அலுவலக செயல்பாட்டுக்கான பணிகள் 2020 மார்ச் மாதத்திற்குள் நிறைவடையும் என்ற நிர்ணயிப்போடு தொடங்கப்பட்டன. ஆனால், மின்னல் வேகத்தில் பணிகள் முடிக்கப்பட்டு உரிய காலத்திற்குள் 58 பிரிவுகளில் 50000 பயனாளிகளுக்கான என்ஐசி இ-அலுவலக செயல்பாடு வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டது. இந்தத் தொகுப்பை கையாளும் நிர்வாகிகளுக்கும் 6 மாதங்களுக்குள் பயிற்சி அளிக்கப்பட்டது.
ரயில்வே வாரிய இடி/டிடி திரு. உமேஷ் பலோண்டா, ரயில்டெல் நிறுவனத்தின் ஜிஎம் / ஐடி திட்டம் திருமதி ஹரிதிமா ஜெய்பூரியார் ஆகியோர் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். ரயில்வே வாரியத் தலைவர் திரு.வினோத்குமார் யாதவ், உறுப்பினர் திரு. பிரதீப் குமார், ரயில்டெல் நிறுவனத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு.புனீத் சாவ்லா மற்றும் ரயில்வே, ரயில்டெல் மூத்த அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
காகிதம் இல்லாத இ-அலுவலக கலாச்சாரம் நிர்வாகச் செலவைக் குறைப்பதோடு உலகின் மிகவும் அவசரத் தேவைகளில் ஒன்றாகவும் நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தும் கரியமிலவாயு வெளியேற்றத்தையும் குறைக்கும்.
------
(Release ID: 1599263)
Visitor Counter : 145