ரெயில்வே அமைச்சகம்
2019 ஆம் ஆண்டின் செயல்பாடுகள்: ரயில்வேத் துறை
Posted On:
31 DEC 2019 5:42PM by PIB Chennai
ரயில்வேத் துறையில் கூடுதல் முதலீடு
- இதுவரை இல்லாத வகையில் மூலதனச் செலவு: 2019-20 பட்ஜெட் மதிப்பீட்டில் ரூ.1,60,176 கோடி
- 2018-19-ஐ விட, 20.1% அதிகம்
- நவம்பர் 2019 (ஏப்ரல்-நவம்பர் 2019) வரையிலான செலவு ரூ.1,02,008.61 கோடி. இது 63.7% ஆகும். 2018-19 ஆம் ஆண்டின் இதேகாலகட்டத்தில் 61.3% செலவு செய்யப்பட்டது.
- 2030 வரை ரூ.50 லட்சம் கோடி முதலீடு செய்ய திட்டமிடப்பட்டு, 2019 நிதிநிலை அறிக்கையில், ரயில்வேத் துறையை நாட்டின் வளர்ச்சிக்கான எந்திரமாக மாற்ற வழிவகை காணப்பட்டுள்ளது.
கட்டமைப்பு வசதி மேம்பாடு
விரைவான கட்டுமானம்
- கடந்த ஆண்டு (ஏப்ரல்-நவம்பர் காலகட்டம்) 1,014 டிராக் கிலோமீட்டர் அளவிற்கு புதிய ரயில் பாதைகள், இரட்டை ரயில்பாதைகள் & அகலப் பாதைப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 1,165 டிராக் கிலோமீட்டர் (+15%) அளவிற்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- பணியாளர்களுடன் கூடிய லெவல் கிராசிங்குகளை அகற்றும் பணி, 199% அளவிற்கு மேற்கொள்ளப்பட்டது. கடந்த ஆண்டின் இதேகால கட்டத்தில் 296 பணியாளர்களுடன் கூடிய லெவல் கிராசிங்குகள் அகற்றப்பட்ட நிலையில், நவம்பர் 2019 வரை 904 லெவல் கிராசிங்குகள் அகற்றப்பட்டுள்ளன.
- பாலம் புதுப்பித்தல் அதிகரிப்பு (+82%): கடந்த ஆண்டு இதேகாலகட்டத்தில் 472 பாலங்கள் புதுப்பிக்கப்பட்ட நிலையில், ஏப்ரல்-நவம்பர் 2019 வரை 861 பாலங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
- நடைமேம்பாலங்கள் கட்டுமானப் பணியும் 44% அதிகரிப்பு.
- ஏப்ரல்-நவம்பர் 2018 காலகட்டத்தில் 118 நடைமேம்பாலங்கள் கட்டப்பட்ட நிலையில், ஏப்ரல்-நவம்பர் 2019 வரை 170 நடைமேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளது.
- தண்டவாளப் புதுப்பிப்பு பணியும் (+27%) – ஏப்ரல்-நவம்பர் 2018 வரை 2,812 டிராக் கிலோமீட்டர் புதுப்பிக்கப்பட்ட நிலையில், ஏப்ரல்-நவம்பர் 2019 வரை 3,560 டிராக் கிலோமீட்டர் தண்டவாளம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
2022-23-ல் தில்லி - மும்பை மற்றும் தில்லி – ஹவ்ரா வழித்தடங்களில் ரயில்களின் வேகத்தை மணிக்கு 160 கிலோமீட்டர் அளவிற்கு அதிகரிக்க ஒப்புதல்: பலன்கள் :-
- பயணிகள் ரயில்களின் சராசரி வேகம் 60% வரை அதிகரிப்பு
- ராஜ்தானி ரயில் பயணம் ஒரே இரவு கொண்டதாக மாற்றப்பட்டுள்ளது
பசுமை மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதை
- ரயில்வே மின்மயமாக்கல் பணி 1,440 கிலோமீட்டரிலிருந்து இந்த ஆண்டு 2,041 ரயில்வே கிலோமீட்டராக அதிகரிப்பு (+42%)
- டீசல் பயன்பாட்டை குறைக்கும் விதமாக ஏப்ரல் 2018-லிருந்து 5 நவம்பர் 2019 வரை 436 ரயில்கள் மாற்றியமைக்கப்பட்டிருப்பதுடன், இதுவரை மாற்றப்பட்ட ரயில்களின் மொத்த எண்ணிக்கை 500-ஐ எட்டியுள்ளது.
- மொத்தமுள்ள 39 பணிமனைகளில், 7 உற்பத்திப் பிரிவுகள், 5 டீசல் பணிமனைகள், ஒரு பண்டகக் கிடங்கு ஆகியவற்றிற்கு தற்போது ‘கிரீன் கோ சான்றிதழ்’ பெறப்பட்டது. இவற்றில் 7 பிரிவுகள் 2019-20 ஆம் ஆண்டில் சான்றிதழ் பெற்றுள்ளன.
- சுற்றுச்சூழல் மேலாண்மை முறைகளை கடைபிடித்ததற்காக, நடப்பாண்டில் 85 ரயில் நிலையங்களுக்கு ஐஎஸ்ஓ:14001 சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி
மண்டல ரயில்வேக்கள் & உற்பத்திப் பிரிவுகளில் 2021-22 ஆம் ஆண்டுக்குள் ஆயிரம் மெகாவாட் அளவிற்கு சூரியசக்தி மின்சாரமும், 200 மெகாவாட் அளவிற்கு காற்றாலை மின்சாரமும் உற்பத்தி செய்ய இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது.
சுகாதாரம் & தரமான உணவு
- ஐஆர்சிடிசியின் சமையல் பிரிவுகளை சிசிடிவி மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யும் வசதி, 18 சமையல் பிரிவுகளிலிருந்து (மே 2019) 40 சமையல் பிரிவுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
- உணவுப் பொட்டலங்களில் க்யூ ஆர் கோட் அறிமுகப்படுத்தப்பட்டு, சமையல் அறை பற்றிய கருத்தறியும் நடைமுறை 2-லிருந்து 28-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
- ரயில்களில் விற்பனை செய்யப்படும் பொருட்களை விற்பனை செய்ய பயன்படுத்தும் பாயிண்ட் ஆப் சேல் கருவிகளின் எண்ணிக்கை மற்றும் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் வசதி 417 ரயில்களில் 5,122 கருவிகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் கட்டணம்
- ரயில்வே பயணியர் சட்டம் 1956-ல் உள்ள முனைய வரி ரத்து செய்யப்பட்டுள்ளது. யாத்திரை தலங்கள், திருவிழாக்கள் அல்லது கண்காட்சிகள் நடைபெறும் இடங்களுக்கு செல்லும் பயணிகளை அழைத்துச் செல்லும் ரயில்களில் இந்த முனைய வரி வசூலிக்கப்பட்டது.
- பயணியர் வருவாய்: ஏப்ரல் 2019 முதல் நவம்பர் 2019 வரை இந்திய ரயில்வேயில் பயணம் செய்த பயணிகள் மூலம் 35,249.13 கோடி கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டு இதேகாலகட்டத்தில் கிடைத்த 33,829.58 கோடியைவிட 4.20% அதிகம்.
இந்தியாவில் உற்பத்தி
- இந்திய ரயில்வே 44 வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க உள்ளது. சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த ரயில்பெட்டித் தொழிற்சாலை (ஐசிஎஃப்), தலா 16 பெட்டிகள் கொண்ட 44 ரயில்களுக்குத் தேவையான மின்சார சாதனங்கள் மற்றும் இதர பொருட்கள் கொள்முதல் செய்ய 22 டிசம்பர் 2019 அன்று டெண்டர் கோரப்பட்டது. மத்திய அரசின் “இந்தியாவில் உற்பத்தி செய்வோம்” கொள்கைக்கேற்ப இந்த கொள்முதல் நடவடிக்கைகள் அமையும்.
- வாரணாசியில் உள்ள டீசல் என்ஜின் தொழிற்சாலை, இலங்கை ரயில்வேக்கு 7 டீசல் என்ஜின்களை ஏற்றுமதி செய்துள்ளது.
- பங்களாதேஷில் ரயில் போக்குவரத்தை மேம்படுத்த ஏதுவாக 2 ஆண்டுகளுக்கு, அகலப்பாதை மற்றும் மீட்டர்கேஜ் பாதை ரயில் என்ஜின்களை இந்திய ரயில்வே பங்களாதேஷ் ரயில்வேக்கு வழங்கும்.
பயணியர் சேவைக்கு முன்னுரிமை
நேரம் தவறாமை:
- இந்திய ரயில்வேயின் மெயில் / எக்ஸ்பிரஸ் ரயில்களின் நேரம் தவறாமை 75.67% அளவிற்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
புதிய ரயில்பெட்டிகள் மற்றும் ரயில்கள்
- இந்திய ரயில்வே அல்லாமல், ஐஆர்சிடிசி-யால் இயக்கப்படும் முதலாவது தேஜஸ் ரயில், தில்லி-லக்னோ இடையே இயக்கப்படுகிறது.
- மும்பை-அகமதாபாத் இடையே ஐஆர்சிடிசி-யால் இயக்கப்படும் 2-வது தேஜஸ் ரயிலுக்கான முன்பதிவு தொடங்கிவிட்டது.
- 2-வது வந்தேபாரத் எக்ஸ்பிரஸ், புதுதில்லி - கத்ரா இடையே வழக்கமான சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
- 2019-20-ல் 194 ரயில்கள் சிறப்பான தரத்திற்கு மேம்படுத்தப்பட்டுள்ளன.
- ஏப்ரல் – நவம்பர் 2019 இடையே ஒட்டுமொத்தமாக 78 புதிய ரயில் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
- ஐசிஎஃப் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட 120 இணை ரயில்கள் எல்எச்பி பெட்டிகள் மூலம் விரைவாகவும், பாதுகாப்பாகவும் இயங்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
- சிறப்பு ரயில் இயக்கம்: ஏப்ரல்-நவம்பர் 2019 காலகட்டத்தில் பல்வேறு பண்டிகைகள் மற்றும் விடுமுறை தினங்களையொட்டி, 28,500 நடை சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு
உலகிலேயே மிக அதிக அளவில் பணியாளர்களை வேலைக்கு அமர்த்திய நிறுவனங்களில் ஒன்றாக இந்திய ரயில்வே உருவெடுத்துள்ளது.
- உதவி லோகோ பைலட்டுகள் & டெக்னீஷியன் பதவிகளுக்கான 64,000 இடங்களுக்கு இதுவரை இல்லாத வகையில் 47.45 லட்சம் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
- நிலை 1(முந்தைய குருப்-டி) பணியில் காலியாக உள்ள 63,000 இடங்களுக்கு சுமார் 1.17 கோடி விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுதினர்.
- 13,500 இளநிலை பொறியாளர் பதவிகளுக்கு சுமார் 24.75 லட்சம் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்தனர்.
*****
(Release ID: 1598569)
Visitor Counter : 304