வடகிழக்குப் பகுதி வளர்ச்சி அமைச்சகம்
2019 ஆம் ஆண்டின் செயல்பாடுகள்: வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சகம்
Posted On:
30 DEC 2019 1:04PM by PIB Chennai
2019 ஆம் ஆண்டின் வடகிழக்குப் பிராந்திய மேம்பாட்டு அமைச்சகத்தின் முக்கியமான செயல்பாடுகள் வருமாறு:
- வடகிழக்கு பிராந்தியத்தின் சமூக மற்றும் அடிப்படைக் கட்டமைப்பில் உள்ள இடைவெளிகளை சரிசெய்ய 2017 டிசம்பரில் மத்திய அரசு வடகிழக்கு சிறப்பு அடிப்படை வசதிகள் மேம்பாட்டுத் திட்டத்திற்கு அனுமதி அளித்தது.
- பல்வேறு சிறப்புத் திட்டங்களின் மூலம் ரூ.3,124.72 கோடி செலவிலான மொத்தம் 211 திட்டங்கள் வடகிழக்குப் பிராந்திய மேம்பாட்டு அமைச்சகத்தால் அமலாக்கப்பட்டுள்ளது.
- அஸ்ஸாமின் குவஹாத்தியில் உள்ள அஸ்ஸாம் நிர்வாகவியல் கல்லூரியில் 2019 செப்டம்பர் 8, 9 தேதிகளில் வடகிழக்குக் கவுன்சிலின் 68-ஆவது கூட்டம் நடைபெற்றது. இதில், 8 வடகிழக்கு மாநிலங்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டு, முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
- வடகிழக்குப் பிராந்திய கலாச்சாரம், பாரம்பரியம், வணிக வாய்ப்புகள் ஆகியவற்றை மேம்படுத்தவும், பிரபலப்படுத்தவும் 2019 நவம்பர் 23 முதல் 26 வரை வாரணாசியில் 4 நாள் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
- பெங்களூர் பல்கலைக்கழகத்தில் பயிலும் வடகிழக்குப் பிராந்திய மாணவிகளுக்கான விடுதியை 2019 மார்ச் 6 அன்று கர்நாடக மாநிலம் குல்பர்காவில் பிரதமர் திரு.நரேந்திர மோடி திறந்துவைத்தார்.
- புதுதில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வடகிழக்குப் பிராந்திய மாணவர்களுக்கு ரூ.28.675 கோடி செலவில் விடுதிகட்டும் திட்டத்திற்கு வடகிழக்குக் கவுன்சில் ரூ.11.01 கோடியை விடுவித்தது. இதில் தற்போது 10 சதவீதப்பணிகள் நிறைவடைந்துள்ளன. 2020 டிசம்பரில் முழுமையடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- தில்லியில் உள்ள ரோகினி என்ற இடத்தில் வடகிழக்கு மாநிலங்களில் மாணவர்களுக்கான விடுதி கட்டுவதற்கு 1990 சதுரமீட்டர் நிலம் வாங்க ரூ.2.50 கோடி அனுமதிக்கப்பட்டது.
- 2019-20 ஆம் நிதியாண்டிற்கு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட ரூ.1476.00 கோடியில் 13.12.2019 வரை ரூ.867.32 கோடி செலவிடப்பட்டுள்ளது.
- 2019-20-ல் ரூ.964.25 கோடி அனுமதிக்கப்பட்ட செலவில் மொத்தம் 78 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
- வடகிழக்குப் பிராந்தியத்தில் முன்னேற விரும்பும் 14 மாவட்டங்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ.1 கோடி வீதம், ரூ.14 கோடியை வடகிழக்குக் கவுன்சில் விடுவித்துள்ளது.
- வடகிழக்குப் பிராந்திய மேம்பாட்டு நிதிக்கழகம் 2019 ஜனவரி 1 முதல், 2019 டிசம்பர் 16 வரை ரூ.315.72 கோடி அனுமதித்து ரூ.281.55 கோடி விநியோகித்துள்ளது. நுண் கடன், சுகாதாரம், சுற்றுலா, கைத்தறி, கைவினைப் பொருட்கள், உணவு பதனத்தொழில் போன்றவற்றுக்கு நிதியுதவி செய்யப்பட்டுள்ளது.
*****
(Release ID: 1597988)
Visitor Counter : 118