உள்துறை அமைச்சகம்

ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம் 2019-ன் பிரிவு 3 தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு முன்வைக்கப்பட்ட யோசனைக்கு 1961-ஆம் ஆண்டின் மத்திய அரசு (நடவடிக்கை) விதிகளின் 12-வது விதிப்படி மத்திய அமைச்சரவை பின்னேற்பு வழங்கியுள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 20 NOV 2019 10:44PM by PIB Chennai

ஜம்மு – காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம் 2019-ன்படி, புதிதாக உருவாக்கப்பட்ட லடாக் யூனியன் பிரதேசத்தில் கார்கில், லே ஆகிய இரண்டு மாவட்டங்கள் உள்ளன. முந்தைய ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலிருந்த மற்ற மாவட்டங்கள் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளன.

இவற்றில் கார்கில் மாவட்டம் ஏற்கெனவே இருந்த லே, லடாக் மாவட்டத்தின் பகுதிகளிலிருந்து உருவாக்கப்பட்டுள்ளது. இதன்படி, கார்கில் மாவட்டம் உருவாக்கப்பட்டபின், புதிய லடாக் யூனியன் பிரதேசத்தின் லே மாவட்டத்தில், கில்ஜிட், கில்ஜிட் வஸாரத், சில்ஹாஸ் ஆகிய மாவட்டங்களின் பகுதிகளை சேர்ப்பதற்கு ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு (சிக்கல்களை நீக்குவது) இரண்டாம் உத்தரவு குடியரசுத் தலைவரால் பிறப்பிக்கப்பட்டது.

                                     *******


(வெளியீட்டு அடையாள எண்: 1592743) வருகையாளர் எண்ணிக்கை : 131
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Telugu