பிரதமர் அலுவலகம்

‘5-ஆவது இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா’-வில் காணொலிக் காட்சி வாயிலாக பிரதமர் ஆற்றிய உரை

Posted On: 05 NOV 2019 5:42PM by PIB Chennai

எனது அமைச்சரவை சகா, டாக்டர் ஹர்ஷ்வர்தன் அவர்களே, உலகெங்கிலும் இருந்து  வந்துள்ள அறிவியல் சமுதாயத்துடன் தொடர்புடைய நண்பர்களே, விஞ்ஞான் பாரதி பிரதிநிதிகளே, மாணவர்களே, நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து இம்மாநாட்டில் பங்கேற்றுள்ள பிரதிநிதிகளே, தாய்மார்கள் மற்றும் பெரியோர்களே!

நவீன தொழில்நுட்பம் மூலம் இன்று நான் உங்களுடன் கலந்துரையாடினாலும், நான் இங்கிருந்தே உரையாற்றினாலும், நீங்கள்  மிகவும் மகிழ்ச்சியுடனும், பேரார்வத்துடனும் இருப்பீர்கள் என்பதை நான் நன்கு அறிவேன். 

நண்பர்களே,

5-ஆவது இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா, அறிவாற்றல் மற்றும் அறிவியலில் ஒவ்வொரு துறையின் மூலமும் மனிதகுலத்திற்காக பாடுபட்ட சிறப்புவாய்ந்த நபர்களை உருவாக்கிய இடத்தில் நடைபெறுகிறது.  சர் சி வி ராமனின் பிறந்த நாள் நவம்பர் 7 அன்றும், ஜெகதீஷ் சந்திரபோஸின் பிறந்த நாள் நவம்பர் 30 அன்றும் கொண்டாடப்படவுள்ள வேளையில், இந்தத் திருவிழா நடைபெறவுள்ளது.

முதுபெரும் அறிவியல் விஞ்ஞானிகளின் சிறப்பைக் கொண்டாட இதைவிட வேறு பொருத்தம் எதுவும் இருக்க முடியாது.  இந்த திருவிழாவுக்கு, “ரைசென்: ஆராய்ச்சி, புதுமைக் கண்டுபிடிப்பு மற்றும் அறிவியல் மூலம் நாட்டிற்கு அதிகாரமளித்தல்” என்று பெயரிட்ட விழா ஏற்பாட்டாளர்களுக்கு எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.  21 ஆம் நூற்றாண்டில் இந்தியா மற்றும் நமது எதிர்காலத்தின் சாராம்சம் என்ற கருத்திற்கு ஏற்ப, இந்த பெயரிடப்பட்டுள்ளது.

நண்பர்களே,

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் இல்லாமல் உலகில் எந்த நாடும் முன்னேற்றம் அடைந்ததில்லை.  இந்தியாவும் கடந்த காலத்தில் இந்த துறையில் பெருமளவு சாதனை படைத்துள்ளது.  தலைசிறந்த விஞ்ஞானிகளை நாம் உருவாக்கியிருக்கிறோம்.  நமது எதிர்காலம் மிகவும் ஒளிமயமானது.  தற்காலம், அறிவியல் தொழில்நுட்ப ஆதிக்கம் நிறைந்தது.  இவை அனைத்திற்கும் இடையே, எதிர்காலத்திற்கான நமது பொறுப்புணர்வு பன்மடங்கு அதிகரித்துள்ளது.   இந்த பொறுப்புகள் மனிதாபிமான அடிப்படையிலானவை மட்டுமின்றி, அறிவியல்-தொழில்நுட்பத்தையும் முன்னெடுத்துச் செல்ல வேண்டியுள்ளது.  இந்த பொறுப்பை உணர்ந்து அரசு புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் புதுமைகளை புகுத்த அமைப்பு ரீதியான ஆதரவை வழங்கி வருகிறது. 

நண்பர்களே,

நாட்டில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சூழல் மிகவும் வலிமை வாய்ந்ததாக உள்ளது.  மிகவும் வலிமை வாய்ந்த மற்றும் பல தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கக்கூடிய சூழலை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம். 

ஆறாம் வகுப்பு முதலான மாணவர்கள் அடல் ஆய்வகங்களுக்கு செல்வதை உறுதிச் செய்யவும், அதன் பிறகு கூடிய விரைவில் அவர்கள் கல்லூரியை விட்டு செல்லும்போது, அவர்கள் உரிய அரவணைப்பைப் பெற்று அதன்மூலம் புதிய தொழில் தொடங்குவதற்கான சூழலை உருவாக்கவும் நாம் முயற்சித்து வருகிறோம்.  அந்த வகையில், நாடுமுழுவதும் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட அடல் ஆய்வகங்கள் குறுகிய காலத்தில் உருவாக்கப்பட்டுள்ளன.  இவை தவிர, 200-க்கும் மேற்பட்ட அடல் அரவணைப்பு மையங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.  பல்வேறு விதமான ஹேக்கத்தான் போட்டிகளில் பங்கேற்க லட்சக்கணக்கான மாணவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.  இதன்மூலம் அவர்கள், நாடு எதிர்நோக்கியுள்ள சவால்களுக்கு தங்களது சொந்த முயற்சியில் தீர்வு காண்பார்கள்.  அத்துடன் கொள்கைகள் மற்றும் நிதியுதவி மூலமாகவும் ஆயிரக்கணக்கான புதிய தொழில்கள் தொடங்க ஆதரவு அளித்து வருகிறோம். 

கூடுதல் விவரங்களுக்கு www.pib.nic.in என்ற இணைய தளத்தை காணவும். 

***************



(Release ID: 1592203) Visitor Counter : 138