பாதுகாப்பு அமைச்சகம்

இந்திய கப்பற்படை கல்விக் கழகத்திற்கு குடியரசுத் தலைவரின் கொடியைக் குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் வழங்கவுள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 18 NOV 2019 1:14PM by PIB Chennai

இந்திய ராணுவத்தின் முப்படைத் தளபதியான மாண்புமிகு குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் இந்திய கப்பற்படை கல்விக் கழகத்திற்கு குடியரசுத் தலைவரின் கொடியை 2019 நவம்பர் 20 புதன் அன்று வழங்கவுள்ளார்.  குடியரசுத் தலைவரின் கொடி ராணுவப் பிரிவு ஒன்றுக்கு வழங்கப்படும் மிக உயரிய கவுரவமாகும். 

கேரள மாநிலம் எழிமலாவில் உள்ள இந்திய கப்பற்படை கல்விக் கழகத்தில் நவம்பர் 20 அன்று நடைபெறும் விழாவில், இங்குள்ள வீரர்களின் அணிவகுப்பு நடைபெறும். கேரள ஆளுநர், கப்பற்படைத் தளபதி, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில அமைச்சர்கள், கப்பற்படையின் மூத்த அதிகாரிகள் உள்ளிட்டப் பிரமுகர்களும் விழாவில் கலந்து கொள்வார்கள்.  இந்த விழாவை நினைவுகூரும் விதமாக சிறப்பு அஞ்சல் உறையும் வெளியிடப்படும். 

***************


(வெளியீட்டு அடையாள எண்: 1592023) வருகையாளர் எண்ணிக்கை : 171
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी