தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

“தொழிலில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமை குறியீடு, 2019” குறித்த ஆலோசனைகளை நாடாளுமன்ற நிலைக்குழு வரவேற்கிறது

प्रविष्टि तिथि: 07 NOV 2019 5:45PM by PIB Chennai

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2019 தொழிலில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமை குறியீட்டை, மக்களவைத் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினரான திரு.பார்த்துருஹரி மஹ்தாப் தலைமையிலான தொழிலாளர் நலம் குறித்த நிலைக் குழுவின் ஆய்வுக்காகவும், அறிக்கைக்காகவும் அனுப்பி வைத்தார். இந்தக் குழு இது குறித்த கருத்துக்கள், ஆலோசனைகளை பொதுமக்கள் மற்றும் அரசுசாரா அமைப்புகள், நிபுணர்கள், இப்பிரச்சனையில் அக்கறை கொண்டோர் மற்றும் நிறுவனங்களிடமிருந்து வரவேற்றுள்ளது.

எழுத்து மூலமான கடிதங்கள், ஆலோசனைகளை சமர்ப்பித்தல் மற்றும் குழுவின் முன்பு வாய்மொழி சாட்சியம் அளித்தல் ஆகியன குறித்த நடைமுறைகளை https://www.loksabha.nic.in என்ற வலைதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இந்த வலைதளத்தில் ‘Committees’ Press Release. என்பதை சுட்டி இதனை தெரிந்து கொள்ளலாம்.

 

*****


(रिलीज़ आईडी: 1591016) आगंतुक पटल : 158
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी , Bengali , Malayalam