தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
தொழில் சார் நோய்கள், மறுவாழ்வு, தொழில் பயிற்சிப் பிரிவில் இந்தியா, ஜெர்மன் முகமைக்கு இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
प्रविष्टि तिथि:
06 NOV 2019 8:43PM by PIB Chennai
உடல் குறைபாடுகள் உள்ள காப்புறுதி செய்யப்பட்டவர்களுக்கு தொழில் சார் நோய்கள், மறுவாழ்வு, தொழில் பயிற்சி ஒத்துழைப்புக்காக இந்தியாவுக்கும், ஜெர்மனுக்கும் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்களைச் செயல்படுத்த பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை பின்னேற்பு ஒப்புதல் வழங்கியது.
பயன்கள்
டிஜியுவி என்னும் ஜெர்மனியின் சிறப்பு முகமையுடன் செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம், சமுதாயப் பாதுகாப்பை பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைக்க வகை செய்யும் தொழில் சார் நோய்களைக் கண்டுபிடித்து சிகிச்சை அளிப்பதுடன் நோய் தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
***************
(रिलीज़ आईडी: 1590791)
आगंतुक पटल : 208