நிதி அமைச்சகம்

இந்தியா – பிரேசில் இடையே இரட்டை வரிவிதிப்புத் தவிர்ப்பு மற்றும் வருமான வரி தொடர்பான வரி ஏய்ப்பு, தவிர்ப்பு உடன்படிக்கையைத் திருத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 06 NOV 2019 8:35PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியா – பிரேசில் அரசுகளுக்கு இடையேயான இரட்டை வரிவிதிப்புத் தவிர்ப்பு மற்றும் வருமான வரி தொடர்பான வரி ஏய்ப்பு, தவிர்ப்பு உடன்படிக்கையில் நெறிமுறைத் திருத்தம் மேற்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

செயலாக்க வழிமுறை மற்றும் இலக்குகள்:

     அமைச்சரவை ஒப்புதலுக்கு பிறகு, நெறிமுறைகளைச் செயல்படுத்தத் தேவையான நடைமுறைகள் நிறைவேற்றி முடிக்கப்படும். இதன் செயலாக்கம் அமைச்சகத்தால் கண்காணிக்கப்பட்டு அரசுக்கு தகவல் தெரிவிக்கப்படும்.

--


(Release ID: 1590784) Visitor Counter : 92


Read this release in: English , Urdu , Hindi , Telugu