பிரதமர் அலுவலகம்

தில்லி துவாரகா பகுதியில் உள்ள டிடிஏ மைதானத்தில் நடைபெற்ற தசரா கொண்டாட்டத்தில் பிரதமர் ஆற்றிய உரை

प्रविष्टि तिथि: 08 OCT 2019 9:05PM by PIB Chennai

ஜெய் ஸ்ரீ ராம்! ஜெய் ஸ்ரீ ராம்!

ஜெய் ஸ்ரீ ராம்! ஜெய் ஸ்ரீ ராம்!

ஜெய் ஸ்ரீ ராம்! ஜெய் ஸ்ரீ ராம்!

     இங்கு பெருமளவில் குழுமியுள்ள கலாச்சாரத்தை நேசிக்கும் எனதருமை சகோதார, சகோதரிகளே! இந்த விஜயதசமி நன்னாளில் உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகள்.

இந்தியா ஒரு திருவிழாக்களின் பூமி. வருடத்தின் 365 நாட்களில், ஏதாவது ஒருநாள்தான், இந்தியாவின் எந்தப் பகுதியிலும் திருவிழாக்கள் இல்லாமல் இருக்கும்.

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகப் பின்பற்றி வரும் கலாச்சார பாரம்பரியம் காரணமாக, நமது வாழ்க்கை புராண கதைகளுடன் ஒன்றிணைந்ததாக மாறியிருப்பதுடன், இது நமக்கு வலிமையான கலாச்சார வரலாற்றையும் அளித்துள்ளது. நம்நாட்டில் திருவிழாக்கள், கலாச்சாரம், கல்வி மற்றும் ஒட்டுமொத்த சமூக வாழ்க்கைக்கு புத்துணர்வு அளிப்பதாக அமைந்துள்ளன.

திருவிழாக்கள் நம்மை இணைப்பதோடு, ஊக்கமளிப்பதாகவும் உள்ளன. திருவிழாக்கள் நம்மிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்துவதோடு, புதிய சிந்தனைகளை தூண்டும் திறனையும் அளிக்கின்றன.  திருவிழாக்கள் நம் ரத்தத்தோடு கலந்தவை. எனவே, திருவிழாக்கள் தான் இந்தியாவின் சமூக வாழ்க்கையின் ஆன்மாவாக திகழ்கின்றன.

இதுபோன்ற திருவிழாக்கள் காரணமாக, ஆயிரம் ஆண்டு பழமைவாய்ந்த சிறந்த பாரம்பரியம், ஒருபோதும் கூத்தாடி கலாச்சாரமாக மாறால் உள்ளது.  திருவிழாக்கள் ஒருவரது உணர்வுகளை வெளிப்படுத்தும் சிறந்த ஊடகமாக இருப்பதுதான், இந்தத் திருவிழாக்களின் வலிமையாகும்.

திருவிழாக்களின் போது, நமது அறிவுத் திறனை பட்டைத் தீட்டிக்கொள்ள தொடர் முயற்சிகளை மேற்கொள்வதுடன், கண்ணியமான சமுதாயத்தை உருவாக்கவும், திறமையை வெளிப்படுத்தவும் முடிகிறது.  

பல்வேறு விதமான கலை, இசைக்கருவிகள், பாடல்கள் அல்லது நடனம் உள்ளிட்ட அனைத்து வகையான கலைகளும், நமது திருவிழாக்களோடு இரண்டர கலந்துள்ளன.  ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக பின்பற்றப்படும் கலாச்சார பாரம்பரியம், திருவிழாக்கள் மூலம், நமது வாழ்க்கை முழுவதும் கலைகள் கலந்திருப்பதாலும் தான், நாம் இயந்திரங்கள் போல் அல்லாமல், சமுதாயத்தில் உண்மையான மனிதர்களாகத் திகழ்கிறோம்.  மனிதநேயம், உணர்வுகள், கருணை மற்றும் கனிவு ஆகியவை, இதுபோன்ற திருவிழாக்கள் மூலம் புத்தெழுச்சி பெறுகின்றன.

நவராத்திரி பண்டிகையின் ஒன்பது நாட்களில், நவராத்திரி கொண்டாடப்படாத இடம் இந்தியாவின் எந்தப்பகுதியிலும் இல்லை என்ற நிலை உள்ளது.  சக்தி சாதனா திருவிழா எனப்படும் பெண் தெய்வ வழிபாடு, நமது குறைகளையும், அச்ச உணர்வையும் போக்குவதாக உள்ளது.  சக்தி வழிபாடு, நமக்குள் புதிய சக்தியை புகுத்துவதாக உள்ளது.

     இந்தியா பெண்களைப் போற்றும் பூமி. கடந்த ஒன்பது நாட்களாக நாம் அன்னையை வணங்கினோம். அதே உணர்வை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வோம், பெண்களுக்கு மேலும் கண்ணியம் மற்றும் அதிகாரமளிக்க பாடுபடுவோம்.

கூட்டு உணர்வின் வலிமையை அறிந்துகொள்ள நாம் விரும்பினால், பகவான் ஸ்ரீ கிருஷ்ணா மற்றும் பகவான் ஸ்ரீ ராம் ஆகியோரின் உத்வேகத்தை நாம் பெற வேண்டும்.

ஒவ்வொரு திருவிழாவும் நமது சமுதாயத்தை ஒருங்கிணைக்கிறது.

ஜெய் ஸ்ரீ ராம்! ஜெய் ஸ்ரீ ராம்!

ஜெய் ஸ்ரீ ராம்! ஜெய் ஸ்ரீ ராம்!

ஜெய் ஸ்ரீ ராம்! ஜெய் ஸ்ரீ ராம்!

நன்றிகள் பல.

     கூடுதல் விவரங்களுக்கு www.pib.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

*****

 
 


(रिलीज़ आईडी: 1589394) आगंतुक पटल : 228
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Assamese , English , Urdu , हिन्दी , Bengali , Gujarati , Kannada