ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்
2018-19 ஆம் ஆண்டுக்கு தேசிய உரங்கள் நிறுவனம் மத்திய அரசுக்கு ரூ.28.22 கோடி ஈவுத் தொகை வழங்கியுள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
10 OCT 2019 1:43PM by PIB Chennai
2018-19 ஆம் ஆண்டுக்கு தேசிய உரங்கள் நிறுவனம் தன்வசம் வைத்துள்ள பங்குகள் அடிப்படையில் மத்திய அரசுக்கு ரூ.28.22 கோடி ஈவுத் தொகை வழங்கியுள்ளது.
இந்த நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான திரு மனோஜ் மிஸ்ரா ரூ.28.22 கோடிக்கான காசோலையை மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் திரு டி வி சதானந்த கவுடாவிடம் வழங்கினார். உரங்கள் துறை செயலாளர் திரு சபிலேந்திர ரவுல், உர நிறுவனம் மற்றும் துறையின் மூத்த அதிகாரிகள் உடனிருந்தனர்.
*****
(வெளியீட்டு அடையாள எண்: 1587732)
வருகையாளர் எண்ணிக்கை : 153