பிரதமர் அலுவலகம்

சத்தீஸ்கரைச் சேர்ந்த 21 வயது இளைஞரை ஆயுஷ்மான் பாரத் காப்பாற்றியது

இதயத்தில் இரட்டை வால்வு மாற்றியமைப்பது ஏழைகளுக்கு இப்போது இயலாதது அல்ல

Posted On: 01 OCT 2019 7:57PM by PIB Chennai

ஒன்று முதல் இரண்டாண்டுகள் கடுமையான உழைப்பு காரணமாக 21 வயது இளைஞரான சஞ்சய் வார்கெம் என்பவர் நெஞ்சு வலி, நெஞ்சு படபடப்பு, தலைச்சுற்றல், இருமல், மூச்சுத் திணறல் ஆகியவற்றுடன் 14.02.2019 அன்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 

முழுமையான பரிசோதனைக்குப் பின் அவரது இதயத்தில் இரண்டு வால்வுகளையும் மாற்ற வேண்டிய அவசியம் இருப்பது கண்டறியப்பட்டது. 

அவர் மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், மருத்துவர் பரிந்துரைத்த சிகிச்சையை அவரால் மேற்கொள்ள முடியவில்லை.  இதன் காரணமாக  அவரது குடும்பத்தினரும் நம்பிக்கை இழந்து தங்கள் கிராமத்திற்குத் திரும்பினர்.  ஆனால், அவர்கள் திரும்பியவுடன் பிரதமரின் மக்கள் ஆரோக்கியத் திட்டம் குறித்து அறிந்து கொண்டனர்.  இதனால் சஞ்சயும், அவரது குடும்பத்தினரும் ஊக்கமடைந்தனர்.  இரண்டு லட்சம் ரூபாய் செலவு பிடிக்கும் இந்த அறுவை சிகிச்சை பிரதமரின் மக்கள் ஆரோக்கியத் திட்டத்தின்கீழ் செலவில்லாமல் 18.02.2019 அன்று மேற்கொள்ளப்பட்டது. 

இப்போது அவர் வலியிலிருந்து விடுபட்டு மகிழ்ச்சியான, ஆரோக்கியமான வாழ்க்கையை நடத்துகிறார்.

இப்போது அவர் ஆரோக்கியமான மனிதராக இருக்கிறார்.  உலகின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டத்தின் வெற்றி பற்றி விளக்குவதற்காகப் பிரதமரை சந்தித்த 31 பயனாளிகளில் அவரும் ஒருவராக  இருந்தார்.

**********



(Release ID: 1586982) Visitor Counter : 155