நிதி அமைச்சகம்
நிதியமைச்சக அலுவலர்களுக்கு நிதியமைச்சர் தூய்மை உறுதிமொழி செய்து வைத்தார். வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும் ‘ஒருமுறை மட்டுமே பயன்படும் பிளாஸ்டிக்’ ஒழிப்புக்கு உறுதியேற்கப்பட்டது
Posted On:
01 OCT 2019 1:23PM by PIB Chennai
புதுதில்லியில் இன்று நிதியமைச்சக அலுவலர்களுக்கு மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் ‘தூய்மை உறுதிமொழி’ செய்து வைத்தார். வாழ்க்கையின் தனிப்பட்ட நிலையிலும் அலுவல் சார்ந்த நிலையிலும் ‘ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக்’ ஒழிப்புக்கு அரசு மற்றும் நிதியமைச்சக ஊழியர்கள் பெருந்திரள் பிரச்சாரத்திற்கு உறுதியேற்கப்பட்டது.
விழிப்புணர்வை உருவாக்கி ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிலிருந்து விடுபட்ட இந்தியாவை உருவாக்குவதல் என்ற மையப்பொருளோடு நிதியமைச்சகத்தால் 2019 செப்டம்பர் 11 முதல், அக்டோபர் 2 வரை, தூய்மையே சேவை இயக்கம் நடத்தப்படுகிறது.
----
(Release ID: 1586852)
Visitor Counter : 92