தேர்தல் ஆணையம்

ஹரியானா, மகாராஷ்டிரா மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கான பொதுத் தேர்தலுக்கும் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி மற்றும் பல்வேறு மாநில சட்டமன்ற தொகுதிகளின் இடைத் தேர்தலுக்கும் கால அட்டவணையை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது

Posted On: 21 SEP 2019 1:32PM by PIB Chennai

ஹரியானா, மகாராஷ்டிரா மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கான பொதுத் தேர்தல் கால அட்டவணையை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. 

90 உறுப்பினர்களை கொண்ட ஹரியானா மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் 02.11.2019 அன்றும், 288 உறுப்பினர்களை கொண்ட மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் 09.11.2019 அன்றும் முடிவடைகிறது.  இதையடுத்து இந்த மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கான தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

இந்த இருமாநிலங்களிலும் வேட்பு மனுதாக்கல் 27.09.2019-ல் தொடங்கி, 04.10.2019-ல் நிறைவடையும்.  தேர்தல் 21.10.2019 அன்றும், வாக்கு எண்ணிக்கை 24.10.2019 அன்றும் நடைபெறும்.

பீகார் மாநிலம் சமஷ்டிபூர் (தனி) மக்களவைத் தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் விக்ரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரி காமராஜ் நகர் உட்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சட்டப்பேரவைகளின் 64 காலியிடங்களுக்கான இடைத் தேர்தல் அட்டவணையும்  வெளியிடப்பட்டுள்ளது.  

தேர்தல் நடைமுறைகள்

கால அட்டவணை

கெசட் அறிவிக்கை வெளியிடும் தேதி

23.09.2019 (திங்கட்கிழமை)

வேட்பு மனுதாக்கல் செய்ய கடைசிநாள்

30.09.2019 (திங்கட்கிழமை)

மனுக்கள் பரிசீலனை தேதி

01.10.2019 (செவ்வாய்க்கிழமை)

வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள்

03.10.2019 (வியாழக்கிழமை)

தேர்தல் நாள்

21.10.2019 (திங்கட்கிழமை)

வாக்குகள் எண்ணும் தேதி

24.10.2019 (வியாழக்கிழமை)

தேர்தல் நடைமுறைகள் பூர்த்தி அடைய கடைசி நாள்

27.10.2019 (ஞாயிற்றுக்கிழமை)

 

தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பதை அடுத்து தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.

Click here to See Schedule-1

Click here to See Schedule-2

 

****(Release ID: 1585747) Visitor Counter : 52


Read this release in: English , Urdu , Hindi , Marathi