மத்திய அமைச்சரவை
ரயில்வே ஊழியர்களுக்கு 2018-19 நிதியாண்டுக்கான உற்பத்தித் திறனுடன் இணைந்த போனஸ் வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
प्रविष्टि तिथि:
18 SEP 2019 4:04PM by PIB Chennai
2018-19 நிதியாண்டுக்கு 11.52 லட்சம் தகுதியுள்ள அரசிதழ் பதிவுபெறாத ரயில்வே ஊழியர்களுக்கு (ஆர்பிஎப்/ஆர்பிஎஸ்எப் ஊழியர்கள் நீங்கலாக), தொழில் அமைதியைப் பராமரிக்கவும், ரயில்வே ஊழியர்களை ஊக்கப்படுத்தவும், 78 நாள் ஊதியத்திற்கு இணையான உற்பத்தித் திறனுடன் இணைந்த போனஸ் வழங்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் அரசுக்கு ரூ.2,024.40 கோடி செலவாகும்.
திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு 78 நாள் ஊதியத்தை போனசாக வழங்குவதைத் தொடர்ந்து ஆறு ஆண்டுகளாகக் கடைப்பிடித்து வருகிறது. இது எப்போதும் குறைக்கப்பட்டதில்லை.
****************
(रिलीज़ आईडी: 1585458)
आगंतुक पटल : 121