தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
தூர்தர்ஷனின் 60-வது தொடக்க தினம் கொண்டாட்டம் டிடி இந்தியா விரைவில் உலகம் முழுவதும் தெரியும்-பிரகாஷ் ஜவடேகர்
Posted On:
16 SEP 2019 2:53PM by PIB Chennai
தூர்தர்ஷன் தொலைக்காட்சி சேவை தொடங்கப்பட்டதன் 60-வது ஆண்டை குறிக்கும் வகையில், புதுதில்லியில் உள்ள தூர்தர்ஷன் பவனில் இன்று (16.09.2019) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில், மத்திய அமைச்சர் திரு. பிரகாஷ் ஜவடேகர் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய திரு. ஜவடேகர், கடநத 60 ஆண்டுகளில் தூர்தர்ஷன் கடந்து வந்த பாதை மற்றும் அதன் பங்களிப்பை சுட்டிக்காட்டினார். தூர்தர்ஷனின் கடந்தகால நிகழ்ச்சிகளை நினைவுகூர்ந்த அவர், பல்லாண்டு காலமாக நேயர்களை தொடர்ந்து ஈர்த்து வருவதையும் எடுத்துரைத்தார். நவீன தொழில்நுட்ப மாற்றங்களை தூர்தர்ஷன் அவ்வப்போது பின்பற்றி, டிஜிட்டல் முறையில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதோடு, நேயர்களின் செல்ஃபோன் செயலி மூலமாகவே அவர்களை நிகழ்ச்சிகள் சென்றடைவதாகவும் குறிப்பிட்டார். தூர்தர்ஷன் இலவச டிஷ் அபரிமிதமான வளர்ச்சி அடைந்துள்ளது பற்றி குறிப்பிட்ட அவர், இதன்மூலம் ஒவ்வொரு அலைவரிசையும் தற்போது ஒளிபரப்பப்படுவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
(போட்டோ)
நம்பகத்தன்மைதான் தூர்தர்ஷனின் சிறப்பு என்று குறிப்பிட்ட திரு. ஜவடேகர், தற்போது தென்கொரியாவில் ஒளிபரப்பாகும் டிடி இந்தியா அலைவரிசை, விரைவில் உலகம் முழுவதும் ஒளிபரப்பாக உள்ளதாக கூறினார். நிகழ்ச்சிகளின் தரத்தை மேம்படுத்துவது அவசியம் என்று தெரிவித்த அமைச்சர், தூர்தர்ஷனில் பல்வேறு புதிய நிகழ்ச்சிகளை தயாரிக்கக்கூடியவர்களை நிகழ்ச்சிப் பிரிவின் தலைமைப் பொறுப்புக்கு கொண்டுவருவது என்ற பிரஸார் பாரதியின் முடிவையும் பாராட்டினார்.
முன்னதாக, தூர்தர்ஷனின் 60-வது ஆண்டு விழாவை குறிக்கும் சிறப்பு அஞ்சல் தலை மற்றும் அமிதாப் பச்சன் பாடிய பாடலையும் அமைச்சர் திரு. பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டார்.
(போட்டோ)
மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை செயலாளர் திரு. அமித் கரே, பிரஸார் பாரதியின் தலைமை செயலதிகாரி திரு. சசி சேகர் வேம்பட்டி, தூர்தர்ஷன் தலைமை இயக்குநர் திருமதி. சுப்ரியா சாஹு உள்ளிட்டோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
1959-ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி சோதனை அடிப்படையில் ஒளிபரப்பை தொடங்கிய தூர்தர்ஷன், 15, செப்டம்பர் 2019-வுடன் 60 ஆண்டு சேவையை நிறைவு செய்துள்ளது. உலகின் மிகப்பெரிய ஒலிபரப்பு நிறுவனங்களுள் ஒன்றாக திகழும் தூர்தர்ஷன், தேச வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிப்பதோடு, பல தலைமுறைகளாக தூர்தர்ஷனைப் பார்க்கும் நேயர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
கூடுதல் விவரங்களுக்கு www.pib.nic.in இணையதளத்தைப் பார்க்கவும்
******
(Release ID: 1585187)
Visitor Counter : 211