பிரதமர் அலுவலகம்

திரு. ராம் ஜேத்மலானி மறைவிற்கு பிரதமர் இரங்கல்

Posted On: 08 SEP 2019 11:50AM by PIB Chennai

சட்டத் துறை நிபுணரும் முன்னாள் மத்திய அமைச்சருமான திரு. ராம் ஜேத்மலானி அவர்களின் மறைவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்தார்.

 “திரு. ராம் ஜேத்மலானியின் மறைவைத் தொடர்ந்து நாடு மிகச் சிறந்த ஒரு வழக்கறிஞரையும்  பொதுவாழ்க்கையில் தனித்துவம் மிக்கதொரு நபரையும் இழந்து நிற்கிறது; நீதிமன்றத்திலும் சரி, நாடாளுமன்றத்திலும் சரி, மிகவும் செறிவான பங்களிப்பை செய்தவர் அவர். துணிவும் பேச்சுத் திறனும் மிக்க அவர் எந்தவொரு விஷயம் குறித்தும் தனது கருத்தைத் தெரிவிப்பதற்குத் தயங்கியதே இல்லை.


“திரு. ராம் ஜேத்மலானியின் மிகச் சிறந்த அம்சங்களில் ஒன்று தன் மனதில் படுவதை தெளிவாக வெளிப்படுத்தும் திறமையே ஆகும். அதை அவர் எந்தவித அச்சமும் இன்றிப் பயன்படுத்தினார். அவசர நிலையின் இருண்ட நாட்களில் அவர் வெளிப்படுத்திய மனவுறுதியும், மக்களின் உரிமைகளுக்கான அவரின் போராட்டமும் எப்போதும் நினைவில் நிற்பவை. தேவைப்படுவோருக்கு உதவி செய்வது என்பது அவரது தனித்தன்மையில் பின்னிப் பிணைந்த ஓர் அம்சமாகும்.

“ திரு. ராம் ஜேத்மலானி அவர்களுடன் உரையாடுவதற்கான எண்ணற்ற வாய்ப்புகளைப் பெற்றதற்கான நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இத்தகைய துயரமான தருணத்தில் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ஆர்வலர்களுக்கும் எனது இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் இங்கே இல்லாவிட்டாலும் அவரது முன்னோடியான பணிகள் தொடர்ந்து நீடித்து இருக்கும். ஓம் சாந்தி” என்று பிரதமர் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.

***



(Release ID: 1584516) Visitor Counter : 131