பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு

2019 ஆகஸ்ட் 1 முதல் 2020 ஜூலை 31 வரையிலான ஓராண்டு காலத்திற்கு 40 லட்சம் மெட்ரிக் டன் சர்க்கரை இருப்பை உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

Posted On: 24 JUL 2019 4:19PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, கீழ்க்காணும் யோசனைகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது:

 

  1. ஓராண்டுக்கு 40 லட்சம் மெட்ரிக் டன் சர்க்கரை கையிருப்பை உருவாக்குவது,  இதற்கு அதிகபட்சம் ரூ.1,674 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் சந்தை விலை, சர்க்கரையின் இருப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இதனை எந்த நேரத்திலும் திரும்பப்  பெறுவதற்கு / திருத்தம் செய்வதற்கு மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறை பரிசீலனை செய்யலாம்.

 

  1. இந்தத் திட்டத்தின் கீழ் 3 மாதங்களுக்கு ஒருமுறை சர்க்கரை ஆலைகளுக்கு நிதி வழங்கப்படும். கரும்புக்கான நிலுவைத் தொகை இருந்தால் அது விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ஆலைகள் சார்பாக நேரடியாக செலுத்தப்படும்.  எஞ்சியத் தொகை ஏதாவது இருப்பின், அது ஆலையின் கணக்கில் வரவு வைக்கப்படும்.

 

-----



(Release ID: 1580133) Visitor Counter : 122