ரெயில்வே அமைச்சகம்

இந்திய ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கு குரூப் ‘ஏ’ அதிகாரிகள் அந்தஸ்தில் பதவி உயர்வும், ஊதிய உயர்வும் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 10 JUL 2019 5:49PM by PIB Chennai

இந்திய ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கு குரூப்-ஏ அதிகாரிகள் அந்தஸ்தில் பதவி உயர்வும், ஊதிய உயர்வும் வழங்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் மூலம் மூத்த அதிகாரி பதவி உயர்வு பெற்றபின், அடுத்த நிலையில் உள்ளவருக்கு பணியிடம் காலியாக இல்லை என்றாலும், குரூப் ‘ஏ’ பிரிவில் உள்ளவர்களைப் போல் பதவி உயர்வு வழங்குவது 01.01.2006 முதல் முன்தேதியிட்டு அமலுக்கு வரும்.  அதே போல் மத்திய அரசு ஊழியர் நலன் மற்றும் பயிற்சித்துறை 06.06.2000, 20.04.2009 ஆகிய தேதிகளில் வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள்படி, மூத்த அதிகாரியின் 30 சதவீத ஊதியம், மேற்குறித்தபடி பதவி உயர்வு  பெற்றவருக்கு 06.06.2000 முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும்.

---


(Release ID: 1578210) Visitor Counter : 137