நிதி அமைச்சகம்
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு ஆதார் அட்டை அளிக்க மத்திய அரசு பரிசீலனை
Posted On:
05 JUL 2019 1:27PM by PIB Chennai
இந்திய பாஸ்போர்ட் கொண்ட வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு ஆதார் அட்டை அளிக்க மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தியாவின் பாரம்பரிய கைவினை கலைஞர்களை ஒன்றிணைத்து அவர்களின் படைப்பை சர்வதேச சந்தைக்கு எடுத்து செல்வதற்கான இயக்கம் ஒன்றைத் தொடங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
அதேபோல், நிதி ஆண்டு 2019-20 ல் இந்தியா நான்கு புதிய தூதடரகங்களை தொடங்க உள்ளது. 2018 மார்ச் மாதம் இந்திய அரசு ஆப்பிரிக்க கண்டத்தில் 18 தூதரகங்கள் தொடங்கிட ஒப்புதல் அளித்தது. இதில் ஐந்து தூதரகங்கள் 2018-19 நிதியாண்டில் தொடங்கப்பட்டுவிட்டது.
ஐடியாஸ் என்று அழைக்கப்படும் இந்திய மேம்பாட்டு உதவி திட்டத்தின் கீழ் வளர்ந்து வரும் உறுப்பின நாடுகளின் மேம்பாட்டு திட்டங்களுக்கு சலுகை விலையில் நிதி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிதி ஆண்டில் ஐடியாஸ் திட்டம் சீரமைக்கப்படும்.
அதேபோல், 17 சுற்றுலாத் தலங்கள் உலக தரத்திற்கு உயர்த்தப்பட்டு உதாரண தலமாக மாற்றப்படும். நமது நாட்டின் சிறப்பு மிக்க பாரம்பரிய பழங்குடி கலாச்சாரத்தை பராமரிக்க இணைய களஞ்சியம் தொடங்கப்படும். இதில் அக்கலாச்சாரத்தின் தோற்றம் முதல் இன்று வரை ஏற்பட்டுள்ள மாற்றம் வரை அனைத்தும் பதிவு செய்யப்படும் என்று மத்திய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்த நிதி நிலை அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
********
(Release ID: 1577524)