நிதி அமைச்சகம்

அடுத்த 10 ஆண்டுகளுக்கான பத்து அம்சத் திட்டம் – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 05 JUL 2019 1:52PM by PIB Chennai

அடுத்த 10 ஆண்டுகளுக்கு இந்தியாவுக்கான தொலைநோக்கு பார்வை பற்றி எடுத்துரைத்த மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், கடந்த ஐந்தாண்டுகளில் தொடங்கப்பட்ட  திட்டங்களும் சேவைகளும் தற்போது விரைவுபடுத்தப்படும் என்றும், செயல்முறைகள் எளிமையாக்கம், செயல் திறனுக்கான ஊக்கத்தொகை மற்றும் சிறந்த  தொழில்நுட்ப பயன்பாட்டால் இலக்குகள் எட்டப்படும் என்றும் தெரிவித்தார்.

பத்து ஆண்டுகளுக்கான, 10  அம்ச  தொலைநோக்கு பார்வை பற்றி, 2019-20 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யும் போது அமைச்சர் விவரித்தார்.  அவையாவன;

· அடிப்படை மற்றும் சமுதாய உள்கட்டமைப்பை  உருவாக்குதல்.

· பொருளாதாரத்தின் ஒவ்வொரு துறையையும் சென்றடையும் டிஜிட்டல் இந்தியா.

· பசுமையான புவி மற்றும்  நீலமான வானத்துடன் மாசற்ற இந்தியா.

· சிறு-குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள், புதிதாக துவங்கப்படும் தொழில்கள், பாதுகாப்புத் துறை உற்பத்தி, ஆட்டோ மொபைல், மின்னணு, பேட்டரிகள், மருத்துவக் கருவிகள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் மேக் இன் இந்தியா.

· நீர், நீர் மேலாண்மை, தூய்மையான நதிகள்.

· நீலப் பொருளாதாரம்

· விண்வெளித் திட்டங்கள், ககன்யான், சந்திரயான் மற்றும்  செயற்கைக்கோள் திட்டங்கள்.

· தற்சார்பு மற்றும் உணவு தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள் ஏற்றுமதி.

· சுகாதாரமான சமுதாயம் – ஆயுஷ்மான் பாரத், போஷாக்குமிக்க பெண்கள், குழந்தைகள், குடிமக்கள் பாதுகாப்பு.

· ஜன் பாகிரதியுடன் டீம் இந்தியா, குறைவான ஆளுமை, நிறைவான ஆளுமை.

********


(வெளியீட்டு அடையாள எண்: 1577492) வருகையாளர் எண்ணிக்கை : 231
இந்த வெளியீட்டை படிக்க: Marathi , Bengali , English , Telugu