நிதி அமைச்சகம்

சமூகத்தின் நன்மைக்காக தகவல்களை `மக்கள் நலன்' என்ற வகையில் சாதகமாகப் பயன்படுத்தி அரசாங்கம் தலையிடுவது அவசியம்: பொருளாதார ஆய்வறிக்கை

Posted On: 04 JUL 2019 12:18PM by PIB Chennai

மத்திய நிதி மற்றும் பெரு நிறுவன விவகாரங்களுக்கான அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று 2018-19 ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பித்தார். மக்கள் நன்மை என்ற வகையில் தகவல் தொகுப்புகளை உருவாக்குவதில் அரசாங்கம் தலையிட வேண்டும் என்று அந்த அறிக்கை கூறுகிறது. குறிப்பாக சமூகத்தில் பரவலாக நன்மைகள் கிடைப்பதற்காக, ஏழைகள் மற்றும் சமூகப் பிரிவுகளில் இந்தத் தகவல் தொகுப்பு உருவாக்குவதில் தலையிட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. தகவல் தொகுப்பு உருவாக்குவது லாபகரமானதாக இருக்காது என்பதால் தனியார் துறையினர்  இதில் முதலீடு செய்ய மாட்டார்கள். எனவே அரசு தலையிட வேண்டியது மிகவும் முக்கியம் என்று ஆய்வறிக்கை கூறுகிறது.

தகவல் தொகுப்பை மக்கள் நலனுக்காக உருவாக்கும்போது, அந்தரங்க விஷயங்கள் பற்றியும், தகவல்கள் பயன்படுத்துவதில் உள்ளார்ந்த நேர்மையும் இருக்க வேண்டும் என்பதை மனதில் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம் என்றும் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமூகத்தில் அதிகபட்ச அளவுக்கு தகவல் தொகுப்புகள் உருவாக்குவது மற்றும் பயன்படுத்தப்படுவதை  உறுதி செய்வதற்கு, அரசு தலையிட வேண்டியுள்ளது. தகவல் தொகுப்பு அளிப்பதிலோ அல்லது தனியார் துறையினருக்கான ஊக்குவிப்புத் திட்டங்களை சரி செய்யும் வகையிலோ இந்தத் தலையீடு தேவைப்படுகிறது என்று அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. அந்தரங்க தகவல்கள் பாதுகாப்பு மற்றும் ரகசியத் தகவல்களைப் பகிர்வதைப் பாதுகாப்பதற்கு நவீன தொழில்நுட்பங்கள் உள்ள நிலையில், தகவல் தொகுப்பு அந்தரங்க அம்சங்களை சட்டபூர்வ வரையறைக்கு உள்பட்டு, மக்கள் நலனுக்காக தகவல் தொகுப்பை அரசு உருவாக்க முடியும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

*****



(Release ID: 1577228) Visitor Counter : 199