சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

மத்திய பட்டியலில் இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினருக்குள்ளாக உட்-பிரிவுகளுக்கான குழுவிற்கு இரண்டு மாதங்கள் நீட்டிப்பிற்கு அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 12 JUN 2019 7:59PM by PIB Chennai

ஆணையத்தின் காலம் 31 ஜுலை, 2019 வரை தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது

அனைத்து தரப்பு மக்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக பிரதமர் திரு.மோடி அவர்களின் தலைமையிலான தேசிய ஜனநாயக அரசு உறுதிபூண்டுள்ளது. இந்த உணர்வின் அடிப்படையிலும், இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினர்கள்/சமூகங்களுக்கு இடையே சமமான பங்கீட்டின் தேவையை கருத்தில் கொண்டும், மத்திய பட்டியலில் இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினர்களுக்குள்ளாக உட்பிரிவு செய்ய வேண்டும் என்ற பிரச்சினையை ஆராய்ந்திடுவதற்காக அரசியலமைப்பு சட்டப்பிரிவு 340-ன் கீழ் ஆணையம் ஒன்று ஏற்படுத்தப்பட்டது.

பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான அமைச்சரவை, இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினர்களில் உட்பிரிவு செய்ய வேண்டும் என்ற பிரச்சினையை ஆராய்ந்திடுவதற்காக அமைக்கப்பட்ட குழுவின் காலத்தை மேலும் இரண்டு மாதங்களுக்கு, அதாவது, 31 ஜுலை 2019 வரை, நீட்டிப்பு செய்வதற்கான தனது பின்னேற்பு ஒப்புதலை வழங்கியது.

      31, மே 2019 உடன் முடிவடைந்த இந்த ஆணையத்தின் காலம் ஆறாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

தாக்கம் :

பல்வேறு பங்கேற்பாளர்களுடன் நடத்திய விரிவான கலந்துரையாடல்களின் அடிப்படையில் மத்திய பட்டியலில் இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினர்களுக்குள்ளாக உட்பிரிவு செய்ய வேண்டும் என்ற பிரச்சினையை மதிப்பீடு செய்திட உதவும். இது, இப்பிரச்சினை குறித்த விரிவான அறிக்கையை ஆணையம் தாக்கல் செய்திட உதவும்.

 

பின்னனி :

மேதகு ஜனாதிபதியின் ஒப்புதலுடன், 2017, அக்டோபர் 2 அன்று அரசியலமைப்பு சட்டப்பிரிவு 340-ன் கீழ் இந்த ஆணையம் அமைக்கப்பட்டது. ஓய்வுபெற்ற நீதிபதி திருமதி.ஜி.ரோஹிணி தலைமையிலான இவ்வாணையம் 2017, அக்டோபரில் செயல்படத் துவங்கியதுடன், இதர பிற்படுத்தப்பேடார் வகுப்பினர்களில் உட்பிரிவு செய்துள்ள அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் மற்றும் மாநில பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினர் ஆணையங்கள் ஆகியவற்றுடன் கலந்துரையாடியது. முன்னதாக ஆணையத்தால் வழங்கப்பட்ட கலந்துரையாடல் தாள்களுக்கு பெறப்பட்ட மதிப்புகளுக்கேற்ப மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுடன் விரிவான கலந்துரையாடலை நடத்துவதே சாலச்சிறந்ததாகும் என ஆணையம் கருதுகிறது. எந்த சமூகமும் ஒட்டுமொத்த புறக்கணிக்கப்படக்கூடாது என்பதை உறுதி செய்வதற்கு இது முக்கியமானதாகும். இந்நடைமுறைக்கு மேலும் இரண்டு மாதங்கள் தேவைப்படும்.

இதன் காரணமாக, ஆணையம் 2019, ஜுலை, 31 வரை மேலும் இரண்டு மாத காலம், நீட்டிப்பு செய்ய கோரியதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

*****



(Release ID: 1574312) Visitor Counter : 165


Read this release in: Punjabi , English , Telugu , Kannada