பாதுகாப்பு அமைச்சகம்

கடல் வழித் தகவல் பரிமாற்றம் குறித்த பயிற்சி முகாம்

Posted On: 12 JUN 2019 1:23PM by PIB Chennai

இந்திய கடற்படையும், இந்திய பெருங்கடல் பிராந்தியத்தின் தகவல் இணைவு மையமும் இணைந்து கடல் வழித் தகவல் பரிமாற்றம் குறித்த பயிற்சி முகாம் ஒன்றை குருகிராமில் நடத்தின.  இப்பயிற்சியில் துணை அட்மிரல் எம் எஸ் பவார் துவக்க உரையாற்றினார்.  இந்த இரண்டுநாள் பயிற்சி முகாமில் 29 நாடுகளில் இருந்து 41 பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

     தொடக்க விழாவில் உரையாற்றிய துணை அட்மிரல் எம் எஸ் பவார், கடற்படையினர், கூட்டு நாடுகளின் கடற்படையுடன் இணைந்து செயலாற்ற வேண்டிய அவசியம் குறித்தும், அந்த நாடுகளுக்கு இடையே நம்பிக்கை உணர்வை வளர்ப்பது குறித்தும் வலியுறுத்தினார். 

     இப்பயிற்சி முகாமில் இந்திய பெருங்கடல் பிராந்திய தகவல் இணைவு மையத்தின் நோக்கங்கள் பற்றியும், இதன் தகவல் பரிமாற்ற செயல்பாடுகள் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.  மேலும், எண்ணற்ற பாதுகாப்பு அம்சங்கள் பற்றியும், இந்திய பெருங்கடல் பிராந்தியம் சந்திக்கும் சவால்கள் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது.  பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு கடல் வழித் தீவிரவாதம், கடற்கொள்ளை, போதைப் பொருள் கடத்தல், ஆபத்தின் போது உதவுதல், பேரிடர் நிவாரணம் அளித்தல் போன்ற சவால்களை எதிர்கொள்வது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.



(Release ID: 1574053) Visitor Counter : 149


Read this release in: English , Urdu , Hindi , Bengali