மத்திய அமைச்சரவை தலைமைச் செயலகம்

2019 அமைச்சரவைக் குழுக்கள் மாற்றியமைப்பு

Posted On: 06 JUN 2019 5:57AM by PIB Chennai

நடைமுறை பரிவர்த்தனை விதிகளின் கீழ் மத்திய அமைச்சரவைக் குழுக்களை மத்திய அரசு மாற்றியமைத்துள்ளது. நியமனங்களுக்கான அமைச்சரவைக்குழு, குடியிருப்புகளுக்கான அமைச்சரவைக்குழு, பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக்குழு, நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக்குழு, அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக்குழு, பாதுகாப்புக்கான அமைச்சரவைக்குழு, முதலீடு மற்றும் வளர்ச்சிக்கான அமைச்சரவைக்குழு, வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டுக்கான அமைச்சரவைக்குழு ஆகியவை மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்களின் உறுப்பினர்கள் பின்வருமாறு:

 

  1. நியமனங்களுக்கான அமைச்சரவைக்குழு – இடம் பெற்றுள்ளவர்கள்: பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா.

 

  1. குடியிருப்புகளுக்கான அமைச்சரவைக்குழு -

இடம் பெற்றுள்ளவர்கள்: மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, மத்திய சாலைப்போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள் ஆகிய துறைகளுக்கான அமைச்சர் திரு நிதின் ஜெய்ராம் கட்கரி, மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், மத்திய ரயில்வே மற்றும் வர்த்தகத் தொழில்துறை  அமைச்சர் திரு.பியூஷ் கோயல்.

சிறப்பு அழைப்பாளர்கள் :

திரு ஜிதேந்திர சிங், வடகிழக்கு பிராந்திய வளர்ச்சிக்கான இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியம், அணுசக்தி, விண்வெளித்துறை ஆகிய துறைகளுக்கான இணை அமைச்சர்.

திரு.ஹர்தீப் சிங் பூரி, மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு), மத்திய சிவில்  விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு), மத்திய வர்த்தகத் தொழில்துறை இணை அமைச்சர்.

  1. பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக்குழு –

இடம் பெற்றுள்ளவர்கள்: பிரதமர், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, மத்திய சாலைப்போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள் ஆகிய துறைகளுக்கான அமைச்சர் திரு நிதின் ஜெய்ராம் கட்கரி.  மத்திய ரசாயன மற்றும் உரத்துறை அமைச்சர் திரு.டி வி சதானந்த கவுடா, மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை  அமைச்சர் திரு நரேந்திர சி ங் தோமர், மத்திய சட்டம், நீதி, தொலைத் தொடர்பு, மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் திரு ரவிசங்கர் பிரசாத், மத்திய உணவு பதனிடும் தொழில்கள் துறை அமைச்சர் திருமதி. ஹர்சிம்ரத் கவுர் பாதல், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர், மத்திய ரயில்வே மற்றும் வர்த்தகம், மத்திய தொழில் துறை அமைச்சர் திரு. பியூஷ்  கோயல், மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு (தனிப்பொறுப்பு), மற்றும் எஃகு துறைகளுக்கான இணை அமைச்சர்  திரு. தர்மேந்திர பிரதான்.

 

 

  1. நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக்குழு –

இடம் பெற்றுள்ளவர்கள்: மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் திரு ராம் விலாஸ் பாஸ்வான், மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை  அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர், மத்திய சட்டம், நீதி, தொலைத் தொடர்பு, மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் திரு ரவிசங்கர் பிரசாத், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் திரு. தாவர் சந்த் கெலாட், மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் மற்றும் தகவல் ஒலிபரப்புத் துறைகளுக்கான அமைச்சர் திரு பிரகாஷ் ஜவடேகர், மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள், சுரங்கம் மற்றும் நிலக்கரித்துறை அமைச்சர் திரு பிரகலாத் ஜோஷி.

சிறப்பு அழைப்பாளர்கள்:

திரு அர்ஜுன் ராம் மெஹ்வால் நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் கனரக தொழில்கள் மற்றும் பொது நிறுவனங்கள் ஆகிய துறைகளுக்கான இணை அமைச்சர்.

 

திரு.வி.முரளிதரன், வெளியுறவுத்துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான துறைகளின் இணை அமைச்சர்.

 

  1. அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக்குழு-

இடம் பெற்றுள்ளவர்கள்:  பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா, மத்திய சாலைப்போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள் ஆகிய துறைகளுக்கான அமைச்சர் திரு நிதின் ஜெய்ராம் கட்கரி, மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் திரு ராம் விலாஸ் பாஸ்வான், மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை  அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர், மத்திய சட்டம், நீதி, தொலைத் தொடர்பு, மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் திரு ரவிசங்கர் பிரசாத்,

மத்திய உணவு பதனிடும் தொழில்கள் துறை அமைச்சர் திருமதி. ஹர்சிம்ரத் கவுர் பாதல், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புவி அறிவியல் துறைகளுக்கான அமைச்சர் திரு. ஹர்ஷ் வர்தன்,  மத்திய ரயில்வே மற்றும் வர்த்தகத் தொழில்துறை  அமைச்சர் திரு.பியூஷ் கோயல், மத்திய கனரக தொழில்கள் மற்றும் பொது நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு. அரவிந்த் கன்பத் சாவந்த், மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள், சுரங்கம் மற்றும் நிலக்கரித்துறை அமைச்சர் திரு பிரகலாத் ஜோஷி.

 

  1. பாதுகாப்புக்கான அமைச்சரவைக்குழு –

இடம் பெற்றுள்ளவர்கள்: பிரதமர், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங், மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா, மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் திரு சுப்பிரமணியம் ஜெய்சங்கர்.

 

  1. முதலீடு மற்றும் வளர்ச்சிக்கான அமைச்சரவைக்குழு –

இடம் பெற்றுள்ளவர்கள்: பிரதமர்,  மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா, மத்திய சாலைப்போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள் ஆகிய துறைகளுக்கான அமைச்சர் திரு நிதின் ஜெய்ராம் கட்கரி, மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், மத்திய ரயில்வே மற்றும் வர்த்தகத் தொழில்துறை  அமைச்சர் திரு.பியூஷ் கோயல்.

 

  1. வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டுக்கான அமைச்சரவைக்குழு –

இடம் பெற்றுள்ளவர்கள்: பிரதமர்,  மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா, மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை  அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர், மத்திய ரயில்வே மற்றும் வர்த்தகத் தொழில்துறை  அமைச்சர் திரு.பியூஷ் கோயல், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. ரமேஷ் போக்ரியால் “நிஷாங்க்”, மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, மற்றும் எஃகு துறைகளுக்கான  அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான், மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் துறை அமைச்சர் டாக்டர் மகேந்திர நாத் பாண்டே, மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு (தனிப் பொறுப்பு) துறை இணை அமைச்சர்  திரு சந்தோஷ் குமார் கங்க்வார்,  திரு.ஹர்தீப் சிங் பூரி, மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு), மத்திய சிவில்  விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு), மத்திய வர்த்தகத் தொழில்துறை இணை அமைச்சர்.

 

சிறப்பு அழைப்பாளர்கள்:

 

திரு நிதின் ஜெய்ராம் கட்கரி, மத்திய சாலைப்போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள் ஆகிய துறைகளுக்கான அமைச்சர்.

திருமதி. ஹர்சிம்ரத் கவுர் பாதல், மத்திய உணவு பதனிடும் தொழில்கள் துறை அமைச்சர்.

திருமதி. ஸ்மிருதி சுபின் இரானி, மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு மற்றும் ஜவுளித்துறை அமைச்சர்

திரு. பிரஹலாத் சிங் படேல்,  மத்திய கலாச்சாரம் (தனிப்பொறுப்பு) மற்றும் சுற்றுலா (தனிப் பொறுப்பு) துறைகளுக்கான இணை அமைச்சர்.

------

(Release ID:1573516)



(Release ID: 1573534) Visitor Counter : 395