பாதுகாப்பு அமைச்சகம்

‘ஃபானி’ புயல் நிவாரண பணிகளுக்காக இந்திய கப்பல் படை தயார் நிலை

प्रविष्टि तिथि: 30 APR 2019 9:26AM by PIB Chennai

பானி’ புயல் தீவிரமடைந்துவருவதால், தேவையான உதவிகளை அளிக்க இந்திய கடற்படையின் கிழக்கு பிராந்தியம் தயார்நிலையில் உள்ளது. விசாகப்பட்டினம் மற்றும் சென்னையில் உள்ள இந்திய கடற்படையை சேர்ந்த படகுகள், பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் உள்ள மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை அளிக்கவும்,  மக்களை வெளியேற்றவும், மருத்துவப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்து நிவாரணப் பொருட்களை எடுத்து செல்லவும் தயார் நிலையில் உள்ள. இந்த அனைத்து படகுகளிலும், கூடுதல் ஓட்டுனர்கள், மருத்துவர்கள், காற்று நிரப்பக்கூடிய ரப்பர் படகுகள், உணவு, கூடாரம் அமைக்கத் தேவையான பொருட்கள், துணிகள், மருந்துகள், போர்வைகள் உள்ளிட்ட அனைத்து நிவாரணப் பொருட்களும் தேவையான எண்ணிக்கைகளில் இந்த படகுகளில் தயார் நிலையில் உள்ள.

கண்காணிப்பு, மீட்பு, பாதிக்கப்பட்ட மக்களின் வெளியேற்றம், வான்வழி மூலம் நிவாரணப் பொருட்களை விநியோகித்தல் ஆகியவற்றிற்காக அரக்கோண ஐஎன்எஸ் ராஜாளி மற்றும் விசாகப்பட்டினத்தின் உள்ள ஐஎன்எஸ் தேகா ஆகிய கடற்படை விமான நிலையங்களில் கடற்படை விமானங்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ள.

இந்திய கடற்படையின் கிழக்குப் பிராந்தியம், வங்காள விரிகுடாவில் ஏற்படும் மாற்றங்களை உன்னிப்பாக கவனித்து வருகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்படை பகுதி பாதுகாப்பு உயர் அதிகாரி, ஆந்திரப் பிரதேசம் மற்றும் டிஸா கடற்படை அதிகாரிகள், தேவையான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள, சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுடன் தொடர்பில் இருந்துவருகின்றனர்.


(रिलीज़ आईडी: 1571321) आगंतुक पटल : 212
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Malayalam , English , Urdu , हिन्दी , Bengali