பிரதமர் அலுவலகம்

கன்னியாகுமரிக்கு 01.03.2019 அன்று பிரதமர் பயணம்

இடுகை இடப்பட்ட நாள்: 28 FEB 2019 7:11PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி 01.03.2019 அன்று கன்னியாகுமரிக்குப் பயணம் மேற்கொள்வார்.  கன்னியாகுமரி மற்றும் தமிழ்நாட்டுக்கான பல வளர்ச்சித் திட்டங்களை அவர் தொடங்கி வைப்பார்.  இந்தத் திட்டங்கள் தமிழ்நாடு முழுவதும் ரயில் மற்றும் சாலைப் போக்குவரத்துத் தொடர்பை விரிவுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும்.

ரயில்வே

கன்னியாகுமரியில் பல்வேறு ரயில்வே திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைப்பார். 

* மதுரை – சென்னை இடையேயான தேஜாஸ் விரைவு ரயில்வண்டிப் பயணத்தைத் தொடங்குதல். 

தேஜாஸ் எக்ஸ்பிரஸ் மதுரை – சென்னை இடையே நேரடியாகவும், அதிவிரைவாகவும் போக்குவரத்து வசதியை அளிக்கும். 

நவீன வசதிகளைக் கொண்ட தேஜாஸ் எக்ஸ்பிரஸ் மூலம் இந்தப் பிரிவில் ஏராளமான பகல் நேரப்  பயணிகள்  பயனடைவார்கள். 

இது இரண்டாவது தேஜாஸ் ரயில் சேவையாக  இருக்கும்.  முதலாவதாக மும்பை-கமலி இடையே அறிமுகம் செய்யப்பட்டது.

* ராமேஸ்வரம்-தனுஷ்கோடி இடையே ரயில் போக்குவரத்தை மீண்டும் உருவாக்க அடிக்கல் நாட்டுதல்.

ராமேஸ்வரமும், தனுஷ்கோடியும் தமிழ்நாட்டில் மிகப்பெரிய யாத்திரைத் தலமாகவும், சுற்றுலாத் தலமாகவும் விளங்குகின்றன.

1964-ல் ராமேஸ்வரம் புயல் ஏற்பட்டபோது தனுஷ்கோடி ரயில் நிலையம்  அழிந்து போனது. அதிலிருந்து அது கைவிடப்பட்ட நிலையிலேயே  இருந்தது.

இந்தப் பகுதியில் ரயில் தொடர்பை மீண்டும்  உருவாக்குவது சுற்றுலாத் துறைக்கு மிகப்பெரிய ஊக்கமாக இருக்கும். இங்கு வரும் ஆயிரக்கணக்கான யாத்ரீகர்களுக்கும் பயனுடையதாக இருக்கும்.

* பாம்பன் பாலத்தை மீண்டும் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டுதல்

பிரதான நிலப்பகுதிக்கும், ராமேஸ்வரம் தீவுப்பகுதிக்கும் இடையே  பாம்பன் பாலம் ரயில் இணைப்பை வழங்கும்.

தற்போதுள்ள பாலம் 104 ஆண்டு பழமையானது.  பழைய பாலத்திற்கு மாற்றாக புதிய பாலம் கட்டப்படும்.  தற்போதுள்ள ரயில் பாலத்திற்கு  இணையாக இது கட்டப்படும். 

ராமேஸ்வரம் பகுதியில் சுற்றுலா வளங்களை இந்தப் பாலம்  விரிவுப்படுத்தும்.

சாலைப் போக்குவரத்து

கன்னியாகுமரியில் கல்வெட்டுத் திறப்பின் மூலம் பல்வேறு சாலைப் போக்குவரத்துத் திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைப்பார்.

என் எச் – 87-ன் மதுரை- ராமநாதபுரம் பிரிவில் 2/4 வழிப்பாதை நாட்டுக்கு அர்ப்பணிப்பு. 

இந்தப் பிரிவு தமிழ்நாட்டில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களை இணைக்கிறது.  கன்னியாகுமரி மாவட்டத்தின் என் எச் – 47-ல் மார்த்தாண்டம் சந்திப்பிலும், பார்வதிபுரம் சந்திப்பிலும் மேம்பாலங்கள்.  என் எச் – 47-ல் பணகுடியிலிருந்து கன்னியாகுமரி வரை நான்கு வழிச்சாலை.

என் எச் – 785-ல் மதுரை-செட்டிக்குளம் பிரிவில் நான்கு வழிச்சாலைக்கு அடிக்கல் நாட்டுதல்.

என் எச் – 785-ல் செட்டிக்குளம்-நத்தம் பிரிவில் நான்கு வழிச்சாலை.  கன்னியாகுமரியில் சாலைப் பாதுகாப்புப் பூங்கா, போக்குவரத்து அருங்காட்சியகம் திறப்பு.

இந்த சாலைக் கட்டமைப்புத் திட்டங்கள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் சாலைத் தொடர்பை வலுப்படுத்தும்.  பயணிகளுக்குப் பாதுகாப்பான விரைவானப் பயணத்தை இது உறுதி செய்யும்.

கன்னியாகுமரியில் திரண்டிருக்கும் மக்களிடையேயும் பிரதமர் உரையாற்றுவார்.

********************

 


(வெளியீட்டு அடையாள எண்: 1567155) வருகையாளர் எண்ணிக்கை : 207
இந்த வெளியீட்டை படிக்க: Assamese , English , Urdu , Marathi , हिन्दी , Gujarati