மத்திய அமைச்சரவை

தேசிய கனிமம் கொள்கை, 2019-மத்திய அமைச்சரவை ஒப்புதல்

வெளிப்படைத்தன்மை, சிறந்த ஒழுங்கு முறைகள் & செயலாக்கம், சமமான வளர்ச்சி மற்றும் நீடிப்புத்திறன் மீது கவனம் செலுத்தப்படும்
சுரங்கப் பணிகளுக்கு தொழில் துறை அந்தஸ்து

Posted On: 28 FEB 2019 10:30PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமயிலான அமைச்சரவை தேசிய கனிமக் கொள்கை, 2019-க்கு ஒப்புதல் அளித்துள்ளது.

பலன்கள்:

புதிய தேசிய கனிமக் கொள்கை சிறந்த ஒழுங்கு முறைகள் கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்யும். வருங்காலத்தில், நிலையான சுரங்கத் துறை வளர்ச்சிக்கு வித்திடுவதோடு, வேறு பல திட்டங்களால் பாதிக்கப்பட்ட மக்களின், குறிப்பாக பழங்குடியினரின் பிரச்னைகளுக்கு இது தீர்வு அளிக்கும்.

நோக்கம்:                                                                                                                                                 

அதிக ஆற்றல் வாய்ந்த, அர்த்தமுள்ள அமலாக்கம் செய்யக்கூடிய கொள்கையின் மூலம் வெளிப்படைத்தன்மை, சிறந்த ஒழுங்கு முறைகள் கடைபிடித்தல், நிலையான சுரங்கத் துறை, பொருளாதார வளர்ச்சி மற்றும் நிலையான சுரங்க பணிகளை மேற்கொள்வது ஆகியவை தேசிய கனிமக் கொள்கை, 2019-ன் நோக்கமாகும்.


(Release ID: 1567065)