மத்திய அமைச்சரவை
ஆக்ராவின் நகர்ப்புற பொது போக்குவரத்து மேம்படுத்தப்படும்
ஆக்ரா மெட்ரோ ரயில் திட்டம் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்
प्रविष्टि तिथि:
28 FEB 2019 10:33PM by PIB Chennai
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இரண்டு வழித்தளங்களைக் கொண்ட ஆக்ரா மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இவை ஆக்ராவின் முக்கிய இடங்களையும், சுற்றுலா தலங்களையும் நகரப்பகுதிகளையும் இணைக்கும். மெட்ரோ ரயில் திட்டம் அமலாக்கம் செய்யப்படுவதின் மூலம், சாலைகளில் வாகனங்கள் எண்ணிக்கை குறைந்து, போக்குவரத்து மேம்படும். நெரிசல், பயண நேரம், பயண செலவு, மாசு குறையும். மேலும், இந்த வழித்தடங்களையொட்டி பல வீடுகளும் வர்த்தக நிலையங்களும் அமையும்.
முக்கிய அம்சங்கள்:
இரண்டு வழித்தடங்களைக் கொண்ட ஆக்ரா மெட்ரோ ரயில் நகரத்தின் முக்கியப் பகுதிகளில் செல்லும். தாஜ் மஹால், ஆக்ரா கோட்டை, சிகந்தரா, ஐ.எஸ்.பி.டி, ராஜா கி மண்டி ரயில் நிலையம், மருத்துவ கல்லூரி, ஆக்ரா கண்ட் ரயில் நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சஞ்சய் பிளேஸ் மற்றும் அதிக வீடுகள் கொண்ட பகுதிகள் வழியாக இந்த மெட்ரோ ரயில் பாதை அமையும்.
***
(रिलीज़ आईडी: 1566884)
आगंतुक पटल : 138