சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

தமிழ்நாட்டில் ரூ.2,995 கோடி மதிப்புள்ள நெடுஞ்சாலைத் திட்டங்களுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி நாளை அடிக்கல் நாட்டுவதோடு, சில திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்

Posted On: 28 FEB 2019 3:25PM by PIB Chennai

கன்னியாகுமரியில் ரூ.2,995 கோடி மதிப்புள்ள நெடுஞ்சாலைத் திட்டங்களுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி நாளை அடிக்கல் நாட்டுவதோடு, சில திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். சாலைப் பாதுகாப்புப் பூங்காவையும், போக்குவரத்து அருங்காட்சியகத்தையும் அங்கு அவர் திறந்து வைப்பார்.

       மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு உட்பட்ட என்எச்-87 (பழைய என்எச்-49) பிரிவில் மதுரை – ராமநாதபுரம் இரண்டு/நான்குவழிச் சாலையையும், கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட என்.எச்.47-ல் மார்த்தாண்டம் – பார்வதிபுரம் சந்திப்பில் மேம்பாலத்தையும், பணக்குடியிலிருந்து கன்னியாகுமரி வரை என்எச்-44 (பழைய என்.எச்.7) பிரிவில் நான்குவழிச் சாலையையும், கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட நாரிக்குளம் டேங்க் பகுதியையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார்.

       மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களுக்கு உட்பட்ட என்.எச்-785 பிரிவில் மதுரை – செட்டிக்குளம் – நத்தம் நான்குவழிச் சாலைக்கு திரு. மோடி அடிக்கல் நாட்டுவார்.

       சுற்றுச்சூழல் மாசு குறைவு, விரைவான-பாதுகாப்பான பயணம், பயண நேரக் குறைவு, எரிபொருள் சிக்கனம் என்ற வகையில் இந்தத் திட்டங்கள் உள்ளூர் மக்களுக்குப் பயனளிப்பதாக இருக்கும்.

*****



(Release ID: 1566668) Visitor Counter : 169


Read this release in: English , Urdu , Marathi , Hindi