பிரதமர் அலுவலகம்

உத்தரப்பிரதேசத்தில் உள்ள கோரக்பூரில் இருந்து பிஎம்-கிசான் திட்டத்தைப் பிரதமர் நாளை தொடங்கி வைக்கிறார்.

தெரிவு செய்யப்பட்ட சிறு மற்றும் விளிம்பு நிலை விவசாயிகளுக்கு முதல் தவணைத் தொகையாக ரூ.2,000 அவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக மாற்றம் செய்யப்படும்.
சுமார் 12 கோடி சிறு மற்றும் விளிம்பு நிலை விவசாயிகள் பயனடையவுள்ளனர்.
கோரக்பூரில் பல வளர்ச்சித் திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைப்பார்.

Posted On: 23 FEB 2019 4:26PM by PIB Chennai

உத்தரப்பிரதேசத்தில் உள்ள கோரக்பூருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை (24.02.2019) செல்லவிருக்கிறார். 

கோரக்பூரில் பிஎம்-கிசான் திட்டத்தைப் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

கோரக்பூரில் உள்ள இந்திய உரக்கழக மைதானத்தில்  நடைபெறும் நிகழ்ச்சியில் ஒரு பொத்தானை அழுத்துவதன் மூலம் பிஎம்-கிசான் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைப்பார்.  இதையடுத்து, தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு முதல் தவணைத் தொகையாக ரூ.2,000 மின்னணுப் பரிமாற்றம் மூலம் வழங்கப்படும்.

பிஎம்-கிசான் திட்டத்தின்கீழ் தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு சான்றிதழ்களையும் பிரதமர் வழங்கவிருக்கிறார். 

பிஎம்-கிசான் திட்டத்தின் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுடன் காணொலிக் காட்சி மூலம் பிரதமர் உரையாடவிருக்கிறார். 

கோரக்பூரில்  பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார் அல்லது  பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவார்.  அங்கு திரண்டிருப்போர் இடையே அவர் உரையாற்றுவார்.

சுகாதாரத்திற்கு அடிப்படையான எரிவாயு தொடங்கி  பல திட்டங்கள் கோரக்பூரில் பிரதமரால் தொடங்கி வைக்கப்படும்.  இந்தத் திட்டங்கள் உத்தரப்பிரதேச மக்களுக்குப்  பெரும் பயனைத் தரும்   என்று எதிர்பார்க்கப்படுகிறது.

***********



(Release ID: 1566085) Visitor Counter : 125